உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு III சொல்லுவதன்றோ உங்களுக்கு முறை' என்று சகாரன் கூறும்போது நாம் அனுபவித்துச் சிரிக்கிறோம். பத்தாம் அங்கத்தில் “வறியவனாகிய இச்சாருதத்தனைக் கொலைக் களத்திற்குக் கொண்டு போகுங்கால் இத்துணைச் சனநெருக்கம் உள்ளதே! என்னைப் போன்ற பெரிய மனிதனைக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோகும் போது எத்தனைக் கூட்டம் உண்டாகும்' என்று சகாரன் தற்புகழும்போது எந்த மனிதனாலும் சிரிக்காமல் இருக்கமுடியாது. 'பொருத்தமின்றிப் புலம்புவோன் தற்புகழ்பவன் என்று சகாரனைச் சாருதத்தன் குறிப்பிடுவது சரிதான். ஆனால் 'அறிவில்லாதவன்' என்று குறிப்பிடுவதை அவ்வளவு எளிதாய் ஏற்க முடியவில்லை. வசந்தசேனை அறியும் விதத்தில் சாருதத்தன் இல்லத்தைச் சகாரன் காட்டிக்கொடுக்கும்போது 'அறிவிலான்; யாது சொல்லத்தகாததோ அதனையே கூறுகின்றான்' என்று விடன் எண்ணுவதைப் போலவே நாமும் எண்ணுகிறோம். வசந்தசேனையைத் தன்னிடத்தில் ஒப்படைக்காவிட்டால் சாருதத்தன், இறக்கும்வரை தன் பகைக்கு ஆளாக நேரும் என்று சகாரன் பயமுறுத்துகிறான். அப்போதுதான், சாருதத்தன், சகாரனைப் பொருட் படுத்தாமல் 'அறிவிலாதவன்” என்கிறான்; நாமும் சகாரனை, அறிவிலாதவன் என்று முடிவு கட்டுகிறோம். ஆனால், பின்னால் சகாரனைச் சந்திக்கும்போது அந்த முடிவை மாற்றிக் கொள்கிறோம். எட்டாம் அங்கத்தின் இறுதியில் சகாரன் தன் கொடுமைக் கூத்தை அரங்கேற்றுகிறான். அதற்குப் பூசை போடும் விதத்தில் பெளத்தத் துறவியை அடிக்கிறான். வசந்தசேனையைக் கொல்ல மறுக்கும் விடனையும்