1}: மண்ணியல் சிறுதேர் சேடனையும் தந்திரமாக அனுப்பிவைப்பதும் விடன் மீது கொலைக் குற்றத்தைச் சுமத்தி அவனைத் தலைமறைவாய் வாழச் செய்வதும், சேடனைத் தன் வீட்டுமாடியில் கட்டிப்போடுவதும் சாருதத்தன் மீது தன் பாவத்தை ஏற்றுவதும் ஆகிய கொடுமைகளைப் புரிவோனை அறிவில்லாதவன் என்று கூறமுடியுமா? வசந்தசேனை மண்ணில் வீழ்ந்ததும் முதலில் தன்மேலாடையால் மூட நினைத்துப் பின்னர் சருகுகளால் மூடுகிறான் 'இவ்வாடை என் பெயரடையாளம் இடப்பட்டுள்ளதே! அதனால் அறிவுடையான் எவனாவது என் குற்றத்தை அறிந்து கொள்ளுவான்' என்கிறான். இவ்வளவு கவனமாக இருப்பவனை அறிவில்லாதவன் என்று கூற முடியுமா? நீதிபதி சகாரனை நோக்கி வசந்தசேனை 'பொருள் காரணமாகக் கையால் இறுக்கிக் கொல்லப்பட்டாள் என்பதை நீங்கள் எங்ஙனம் அறிந்தீர்கள்' என்று கேட்கும்போது 'ஓ கழுத்து மிகவும் வீங்கி வெறுமை யுற்றிருத்தலாலும் அணிகலன் அணிதற்குரிய மற்றை யுறுப்புக்கள் அவற்றை இழந்திருத்தலாலும் நிச்சயமாக எண்ணுகிறேன்' என்று உடனே பதிலுரைக்கும் சகாரன் அறிவில்லாதவனா? இறுதியாகச் சண்டாளர்களிடம் தன்னைக் காட்டிக் கொடுக்கும் சேடனைத் தந்திரமாகக் குற்றவாளியாக்குகிறான். அவனா அறிவில்லாதவன்? ஆரம்பத்தில் அவன் அறிவில்லாதவனைப் போல் நடித்தானோ என்று நாம் இப்போது ஐயப்பட வேண்டி யிருக்கிறது. சகாரன், தற்காப்புக்காகத் தன் குற்றத்தைச் சாருதத்தன் பால் ஏற்றுகிறான் என்று எண்ணவும் முடியாது. 'யான் குற்றவாளியாயினும், என்னை அரசர் ஒன்றும்செய்ய மாட்டார்' என்று கூறுவதிலிருந்து சாருதத்தனையும் கொல்லவேண்டும் என்ற அவனுடைய வெறியுணர்வு
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/113
Appearance