பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29 இருந்து, படிக்கட்டுகளின் வழியாக ஏறி மேலே வந்து அந்த ஹாலிற்குள் நுழைந்த வாசற்படிக் கதவிற்கு நேர் எதிரிலிருந்த ஒரு கண்ணாடி கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது அவளது திருஷ்டியில் பட்டது. அதற்குமுன் அவள் எல்லாக் கதவுகளையும் ஆராய்ந்த காலத்தில், அந்தக் கண்ணாடிக் கதவையும் அவள் தள்ளிப் பார்த்ததாக அவளுக்கு நினைவுண்டாயிற்று. அப்படி இருக்க, அந்தக் கதவு இப்போது திறந்து வைக்கப்பட்டிருந்ததைக் காண, அவளது வியப் பு முன்னிலும் நூறுமடங்கு அதிகரித்தது. யாரோ மனிதர்கள் அந்த ஹாலைச் சுற்றிலும் மறைந்திருந்து தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு யூகம் உண்டாயிற்று. அவர்கள் தனக்கெதிரில் நேரில் வந்து தங்களது கருத்தை வெளியிடாமல், அவ்வாறு ரகசியமாகக் கதவைத்திறந்து ஊமை ஜாடை காட்ட வேண்டிய காரணம் என்ன என்று யோசனை செய்தாள். அவர்கள் கண்ணாடிக் கதவைத் திறந்து வைத்ததிலிருந்து, தன்னை அவர்கள் அந்தக் கதவின் வழியாக அப்புறம் இருந்த இடத்திற்கு அழைக்கிறார்கள் என்று யூகித்துக்கொண்ட பூர்ணசந்திரோதயம், தான் அங்கே போய், அதன்முடிவு இன்னது என்பதை அறிந்துகொள்வதே உசிதமான காரியம் என்று தீர்மானித்துக் கொண்டவளாய்க் கண்ணாடிக் கதவு இருந்த இடத்திற்குச்சென்று அவ்விடத்தில் சென்ற நடையின் வழியாக அப்பால் சென்றாள். அவ்விடத்தில் வேறொரு ஹால் தென்பட்டது. அது முதலிலிருந்த ஹாலிலும் சிறிதளவு சிறியதாக இருந்ததானாலும், அதைக் காட்டிலும் பதினாயிரம் மடங்கு அதிக அற்புதமாகவும், புதுமையாகவும், அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் கண்கொள்ளா வனப்பைக் கண்ட பூர்ணசந்திரோதயம் பிரமித்து நிலைகலங்கி அப்படியே நின்றுவிட்டாள். அதன் சுவர்களெல்லாம் கண்ணாடியினாலேயே அமைக்கப்பட்டிருந்தமையால், அது ஒரு பளிங்கு மண்டபம் என அவள் யூகித்துக்கொண்டாள். அவள்போய் நின்றவுடனே அவளது வடிவம் பல இடங்களில்