பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O2 பூர்ணசந்திரோதயம் - 5 எதுவும் எனக்குத் தெரியவில்லை. தாங்கள்தான் உடனே முயற்சி செய்து என் தங்கையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்றாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட இளவரசர், ‘ஆகா! இந்த அம் மணிபாயி அப்படிப்பட்ட துஷ் டையா ஆகா! அவள் எத்தனை காரியங்கள் செய்திருக்கிறாள். அவளை அணு அணுவாக வெட்டிச்சித்திரவதை செய்தாலும், அது போதுமான தண்டனையாகாதென்று நினைக்கிறேன். திருவாரூரிலிருந்து ஷண்முகவடிவை அவள் எப்படிக் கோலாப்பூருக்கு வரவழைத்தாள்? அந்த விவரம் உனக்குத் தெரியுமா? என்றார்.

பூர்ணசந்திரோதயம், ‘தெரியும். அவள் சாமளராவிடம் தான் கோலாப்பூருக்குப் போய்விட்டு வந்த வரலாற்றைச் சொன்ன போது, அதையும் சொன்னாள். ஆகையால், எல்லா விவரத்தையும் நான் மறைவிலிருந்து தெரிந்து கொண்டேன். இப்போது கொஞ்சநேரத்துக்கு முன் ஒருவர் வந்துவிட்டுப் போனாரே. அவருடைய பெயர் கலியாணசுந்தரம் பிள்ளை என்பது. அவர் இந்த ஊரிலுள்ள ஒரு பெருத்த தனிகருக்கு நெருங்கிய உறவினர். அந்தத் தனிகருடைய பெயரை நான் இப்போது சொல்லப் பிரியப்படவில்லை. அவர் நிரம்ப வும் துன்மார்க்க புத்தியுடையவர். அவருடைய குணமும் நடத்தையும் இந்தக் கலியாணசுந்தரம் பிள்ளைக்குப் பிடிக்க வில்லை ஆகையால், அவர் அந்தத் தனிகருடைய முகத்திலும் விழிக்கக் கூடாதென்று இந்த ஊரைவிட்டே திருவாரூருக்குப் போய், அங்கே ஒரு சிறிய வீட்டையும் சொற்ப நிலத்தையும் வாங்கிக் கொண்டு இருந்து வருகிறார். அவர் தம்முடைய சொந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்தால் இந்தத் தனிகர் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தன்னிடம் வரும் படி உபத்திரவிப்பார் என்றும், தாம் இன்ன இடத்திலிருக்கிறோம் என்பது இந்தத் தணிகருக்குத் தெரியாமலிருக்க வேண்டு மென்றும், அதுவுமன்றி, இந்தத் தனிகருடைய நடத்தை நிரம்பவும் கெடுதலாயிருப்பதால், தாம் இவருடைய