பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|22 வாதாடவில்லை. அடிகளாரோ, சிவம்-செம்பொருள் எனவும், சிவமதமே-தமிழர் சமயம் எனவும் அம்மத அடியார் தம் பெருமையைப் பேசுவதே பெரிய புராணம் எனவும், அதை ஒழிக’ என்று கூறுவதைத் தாம் ஒப்பவியலாது என்றும்-விளக்கியுரைத்தார். தந்தை பெரியார் அவர்களின் புராண இதிகாச எதிர்ப் புக் கொள்கைகளில் பற்றுக் கொண்டிருந்த என் தோழர் களால் அதனை ஏற்கமுடியவில்லை. அடுத்த சில நாட் களில் அங்கு வருகை தந்த பாவேந்தர் அவர்களிடம் நானும் சில் தோழர்களுமாக இந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொன்ளுேம். முதல் கட்டத்தில்-'பலே, பலே என்ருர், "அப்படித் தான்", "சரி, சரி' என்றெல்லாம் கூறிவந்தார். "நம்ம பிள்ளைகள் நல்லாத்தான் முழங்கி இருக்கிருர்கள்’ என்ருர். அதன் பின் இவ்வாறு கூறினர்: "அடிகள் பெரிய அறிஞர். ஏராளமாகப் படித்தவர். ஆராய்ச்சி யாளர். என்ருலும் அவர் சைவர். அவருடைய சமயத் தைக் குறை சொன்னல், அவரால் பொறுக்க முடிய வில்லை. என்ருலும் சைவத்தின் தொன்மையைக் கொண்டு அது தென்னுட்டவர் (தமிழர்) சமயம் என்று நம்புகிருர். தமிழர்களிடம் தோன்றித் தனித்து நின்ற சமயம்-ஆரியத்தால் வந்ததன்று என்பதற்காகஎன்பதால் நாமும் மதிக்கலாம். ஆனால் ஏற்க முடி யாது. எவ்வளவு பெரிய அறிஞர் ஆயினும்-மத நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் பின்ன்ர் தெளிவு ஏற்படாது.

  • என்ருலும்-அவரை மதித்து-"பெரிய புராணம் ஒழிக’ என்பதை அன்று நிறுத்திவிட்டீர்களா? அதுவும் ச்ரியே! அவர் நம்மவர். நம்மவர்க்காக-தமிழர்கட்காக வாதாடுபவர்- அதற்காக அவருக்கு மரியாதை கொடுக் கலாம்! அவரது தமிழ்த் தொண்டு பெரிது!

நுண்ணிய நூல் பல கற்பினும்-மற்றுந்தன் உண்மை அறிவே மிகும,