பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3


னின்றும் இது உருவத்தால் மாறுபட்டது. மற்றக் கோபுரங்களின் சதுர அளவு மேலே செல்லச் செல்லப் படிப்படியாகக் குறைந்திருக்கும். ஆனால் இக்கோவிற் கோபுரமோ மேலே செல்லச் செல்லச் சதுர அளவு மிகவும் குறைந்து, கூம்பி எழுந்துள்ளது. இது பதின்மூன்று மாடிகளைக் கொண்டது. கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ள இக்கோபுரம் சிற்பக் கலைக்குப் பெயர் பெற்றது. புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் அரிய சிற்பங்கள், உள்ளத்தைக் கவரும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் ஒவ்வொன்றும், சிற்பக் கலையின் நுண்ணிய வேலைப்பாட்டுக்குச் சான்றுகளாக விளங்குவதோடு, அவற்றை அமைத்த சிற்பிகளின் கலை ஆற்றலையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கோபுரத்தின் உச்சியைப் பிரமரந்திரதளம் என்று சொல்லுவார்கள். இது சுமார் 7 மீட்டர் சதுரமுடையது, இந்த அளவுள்ள ஒரே கல்லைத் தேடிப் பொருத்த, அரசனும் சிற்பிகளும் விரும்பினார்கள். இந்தக் கல்லைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன.

ஒரு நாள் அரசன் உறங்கிக் கொண்டிருந்த போது சிவபெருமான் கனவில் தோன்றி, "நாம் கிழவியின் நிழலில் மகிழ்ந்திருப்போம்" என்று கூறினாராம். உறக்கம் தெளிந்து எழுந்த அரசன் மறுநாட் காலை பலரையும் அழைத்துக் கனவில் ஆண்டவன் கூறிய கிழவியைப் பற்றி விசாரித்தான். மக்கள் அழகி என்ற கிழவியைப் பற்றியும்,