உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல் செய்வார்களென்பதில் எனக்கு ஒரு சிறிதும் ஐயமில்லை. ஏற்கெனவே திருவிதாங்கூர் மன்னர் பெருமானும் அந்நாட்டின் திவான் சர். மாதவராவும் திரு. லட்சுமி நரசிம்முலுவின் மறைவு குறித்துத் தம் இரக்க உரைகளஅனுப்பியிருப்பதோடு, நினைவு நிதிக்காகப் பொருளுதவி செய்திருப்பதாகவும் கேள்விப்படுகிறேன். பல சுதேசி அன்பர்களும் பொருளுதவி செய்துள்ளார்கள். இங்குள்ள மற்றக் செல்வர்களும் துணைபுரிவார்களென்று நம்புகிறேன். பம்பாயில் வாழும் செல்வர்கள் போலல்லாவிட்டாலும், இங்குள்ள செல்வர்கள் தங்களாலியன்ற உதவிகளைச் செய்வார்கள் என்றும் அதஅனால் எடுத்த இக்காரியம் வெற்றி பெறுவது உறுதி என்றும் நம்புகிறேன்.” இவ்வளவும் வீரத் தலைவர் திரு. லட்சுமி நரசிம்முலுவைப்பற்றி மேல் நாட்டுப் பேரறிஞர் நார்ட்டன் கூறிய நன்மொழிகள் என்று நினைக்கும் பொழுது தோன்றும் வியப்பிற்கும் மகிழ்விற்கும் எல்லையுண்டோ?

                                                                   நார்டனின் திட்டம் வெற்றி கண்டது. 1870-ஆம் ஆண்டில் தலைவர் லட்சுமி நரசிம்முலுவின் திருவுருவப் படம் பச்சையப்பர் மண்டபத்தை அணி செய்தது. அப்படத்தைச் சுட்டிக் காட்டி மறுபடியும் வழக்கம் போல ஆண்டு விழாக் கூட்டத்தில் பேசிய கார்ட்டன் பெருமகனுர் புகழ் மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார்.அவர், திருவுருவப் படத்தில் காட்சியளிக்கும் லட்சுமி நரசிம்முலுவைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது தேவையற்றது என்றாலும், என் கையில் இதோ ஒரு கடிதம் இருக்கின்றது. இக்