உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

இரு பெருந்தலைவர்


எல்லாமுமாயிருந்தது. அவர்களுக்கும் சென்னையிலிருந்த கும்பினி ஆட்சி இங்கிலாந்திலிருந்த ஒர் ஆட்சிக் குழுவிற்குக் கட்டுப்பட்டதென்பதும், அக்குழுவிற்குத் தங்கள் குறைகளைத் தெரிவித்து நிறைவுபெறலாம் என்பதும் அறவே தெரியாத உண்மைகன். மக்கன் இத்தகைய பெருத்த அதியசமைக்கு விதி விலக்காய் விளங்கிய பேரறிவாளர், லட்சுமி நரசிம்முலு செட்டியார். அவர், சென் இனச் சுதேசிய சபை' என்ற ஒன்றை நிறுவி குர் , அதன் கலேவரும் ஆளுர், அச்சபை வாயிலாக நாட்டு மக்களின் குறைகளே எல்லாம் அவ்வப்போது வெளிப்படுத்தி, சட்ட வாயிலாகக் குறைகளை எல்லாம் போராட ஆம்பித்தார். பெருஞ்செல்வர்களும், மதிப்பு வாய்ந்த பெரியோர்களும், உத்தியோகப் பற்ற ம்ற பெருமக்களும் சுதேசி சபையின் உறுப் பினர்கள் ஆனார்கள் அந்நாளில் அவர்கள் ஆற்றிய பணி மிகச் சிறந்த பயன் விளைத்தது. அடிக்கடி கூட்டங்கள் கூட்டப்பெற்றன. அக்கூட்டங்களில் மக்களின் குறைகள் ஆராயப்பட்டன. அக்குறை களைப் போக்குமாறு இங்கிலாந்திலிருந்த மேலிட ஆட்சிக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பெற்றன. லட்சுமி நரசிம்முலு செட்டியார் முதன்முதலாக ஐரோப்பியப் பாதிரிமார்களின் கூட்டத்தோடேயே கடும்போர் புரிய கேர்ந்தது. அப்போரை அவர் அரசியல் போராகவும், கலாசாரப் போராகவுமே கருதினர். அங்காளில் இந்தியாவுக்கு வந்த பாதிரி மார்கள் முதன்முதலில் கல்வி ஒளி பரப்புவதற் கென்றே வந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் சமயப் பிரசாரகர்களாக, மக்களை மதம் மாற்றுவோர்களாக