பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல்

7


மாறினர்கள். கல்வியைப் பரப்புவதெல்லாம் மதம் மாற்றும் பணிக்கு அடுத்த நிலையிலையே அவர்களால் மதிக்கப்பட்டது. கும்பெனியார் இந்நாட்டை ஆண்ட அந்நாளில், அரசாங்க மொழியாக ஆங்கிலம் தலை விரித்தாடியது. அது காரனமாக வயிறு வளர்த்து வாழ்க்கையை வளம்படுத்த அரசாங்கப் பணிகளை ஏற்க விரும்புவோர்களுக்கு ஆங்கிலமொழி கட்டாயப் படிப்பாயிற்று. ஆம்; இன்று இந்தி எந்த நிலையைப் பெறவேண்டுமென்று டில்லி ஆட்சியாளர் வற்புறுத்துகின்றனரோ, அந்த நிலை அன்று ஆங்கிலத்திற்கிருந்தது. அதன் விளைவாக நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகட்கு ஆங்கில மொழியைக் கட்டாயமாகப் பயிற்றுவிக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. எனவே, பள்ளிப் பிள்ளைகள் எல்லோரும் பாதிரி மார்களிடம் கல்வி கற்கும் குழந்தைகளானர்கள். அவ்வாறு தம்பால் கல்வி கற்க வந்த குழந்தைகளுள் எளியவரை-வறியவரை எல்லாம் கிறிஸ்தவ மதத்தில் சேர்த்தார்கள் பாதிரி மார்கள். பச்சைப் பாலகர்களாயிற்றே என்ற எண்ணம் அவர்களுக்குச் சிறிதும் இல்லை. நாட்டின் நிருவாகத்தை வேண் டிய பொறுப்பிலிருந்த ஆங்கில மேலதிகாரிகள், இந்த மதம் மாற்றும் வேலையை ஒரு சிறிதும் கண்டிக்க முன் வரவில்லை அதற்கு மாறாக, மறை முகமாகக் கண் அடித்தும், நேர்முகமாக ஊக்கியும் மதம் மாற்றும் வேலைக்கு அரசாங்க ஆதரவையும் அளித்தர்கள். அப்போது திருநெல்வேலிக் கலெக்டார யிருந்த தாமஸ்" என்பவர், வெளிப்படையாகவே பாதிரிமார்களுடன் ஒத்துழைத்து, அந்த மாவட்டத்து மக்களை கிறிஸ்தவமதத்தில் சேர்க்கும்