பெருங்கதை/3 5 பதுமாபதி போந்தது
- பாடல் மூலம்
3 5 பதுமாபதி போந்தது
மகத மன்னவன்
[தொகு]பொருள்புரி யமைச்சர் பூங்கழற் குருசிலொ
டிருளறு திருமணி யிராசகிரி யத்துப்
புறமதி லொடுங்கிய பொழுதின் மறனுவந்
தமரா மன்ன ரருஞ்சம முருக்கிப்
பைங்கழ லமைந்த பாடமை நோன்றாள் 5
வெண்கதிர் மதியின் வீறொளி திகழ்ந்து
தான்மீக் கூரிய வேம வெண்குடை
மணிமுடிச் சென்னி மகத மன்னவன்
தணியா வேகத்துத் தருசகன் றங்கை
பதுமாபதியின் பதாதிகேசம்
[தொகு]பசும்பொற் கிண்கிணி பரடுசுமந் தரற்ற 10
அசும்பம றாமரை யலைத்த வடிவினன்
சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து
மென்மையி னியன்று செம்மைய வாகி
நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள்
மணியும் பவழமு மணிபெற நிரைஇய 15
செம்பொற் பாசிழை செறிய வீக்கிய
பைந்துகி லணிந்த பரவை யல்குலள்
துடிதோங் கூறிய விடுகிய நடுவிற்குப்
பார மாகிய வீரத் தானையள்
ஊக்க வேந்த னாக்கம் போல 20
வீக்கங் கொண்டு வெம்மைய வாகி
இலைப்பூண் டிளைக்கு மேந்திள முலையள்
திலதஞ் சுடருந் திருமதி வாண்முகத்
தலரெனக் கிடந்த மதரரி மழைக்கட்
கதிர்வளைப் பணைத்தோட் கனங்குழைக் காதிற் 25
புதுமலர்க் கோதை புனையிருங் கூந்தற்
பதுமா பதியெனும் பைந்தொடிக் கோமகள்
முரசறைதல்
[தொகு]கன்னி யாயந் துன்னுபு சூழ
மதிற்புறங் கவைஇய புதுப்பூங் காவின்
மகர வெல்கொடி மகிழ்கணைக் காமற்கு 30
நகரங் கொண்ட நாளணி விழவினுள்
எழுநா டோறுங் கழுமிய காதலொடு
வழிபா டாற்றிய போதரு மின்றென
அழகவுள் வேழத் தணியெருத் தேற்றிய
இடியுமிழ் முரசி னிருங்கண் டாக்கி 35
வடிவேற் கொற்றவன் வாழ்கெனப் பல்லூழ்
அணித்திரட் கந்தின் மணிப்பொற் பலகைச்
சித்திர முதுசுவர் வித்தக வேயுள்
ஆவணந் தோறு மறைந்தறி வுறுத்தலின்
நகரமாந்தர் விழாத் தொடங்கல்
[தொகு]இடையற வில்லாக் கடைமுத றோறும் 40
கைவ லோவியர் மெய்பெற வெழுதிய
உருவப் பூங்கொடி யொசிய வெடுத்துத்
தெருவு மந்தியுந் தெய்வச் சதுக்கமும்
பழமண னீக்கிப் புதுமணற் பரப்பி
விண்மிசை யுலகின் விழவமைந் தாங்கு 45
மண்மிசை யுலகின் மன்னிய சீர்த்தி
முழவுமலி திருநகர் விழவுவினை தொடங்க
பதுமாபதி புறப்படல்
[தொகு]அரும்பொறி நுனித்த யவனக் கைவினைப்
பெரும்பொறி வையத் திருந்தியாப் புறீஇ
மங்கலச் சாந்தின் மலர்க்கொடி யெழுதிப் 50
பைம்பொற் பத்திரம் புளகமொடு வீக்கிக்
கதிர்நகைத் தாம மெதிர்முக நாற்றிப்
பத்திர மாலை சித்திர மாகப்
புடைப்புடை தோறுந் தொடக்கொடு தூக்கிக்
கட்டி தோய்த்த காழகி னறும்புகை 55
பட்டுநிசர் கட்டிற் பல்படை குளிப்ப
உள்ளக மருங்கின் விள்ளாக் காதற்
றுணைநலத் தோழியர் துப்புர வடக்கி
அணிநலத் தோழிக் கமைந்தன வியற்றி
வண்டி யெருதுகள்
[தொகு]நெய்நிறங் கொண்ட பைந்நிற மஞ்சளின் 60
வைம்மருப் பணிபெற வண்ணங் கொளீஇக்
கைவினைக் கண்ணி கவின்பெறச் சூட்டித்
தகைமலர்ப் பொற்றார் வகைபெற வணிந்து
காண்டகு வனப்பிற் காலியற் செலவிற்
பாண்டில் வையம் பண்ணிப் பாகன் 65
கோலுடைக் கையிற் கூப்புவன னிறைஞ்சி
வையம் வந்து வாயி னின்றமை
தெய்வ மாதர்க் கிசைமின் சென்றென
இசைத்த மாற்றத் துரைப்பெதிர் விரும்பிப்
போதுவிரி தாமரைத் தாதகத் துறையும் 70
தீதுதீர் சிறப்பிற் றிருமக ளாயினும்
உருவினு முணர்வினு மொப்புமை யாற்றாத்
தெரியிழை யல்குற் றேமொழிக் குறுமகள்
மகளிர் ஏந்திய பொருள்கள்
[தொகு]பாவையும் பந்துங் கழங்கும் பசும்பொற்
றூதையு முற்றிலும் பேதை மஞ்ஞையும் 75
கிளியும் பூவையுந் தெளிமணி யடைப்பையும்
கவரியுந் தவிசுங் கமழ்புகை யகிலும்
சாத்துக் கோயும் பூத்தகைச் செப்பும்
இன்னவை பிறவு மியைய வேந்தி
பதுமாபதி வண்டியேற வருதல்
[தொகு]வண்ண மகளிர் வழிநின் றேத்திச் 80
செண்ணச் சேவடி போற்றிச் சேயிழை
மென்மெல விடுகெனப் பன்முறை பணிய
ஒண்செங் காந்தட் கொழுமுகை யுடற்றிப்
பண்கெழு தெரிவிர லங்கை சிவப்ப
மயிலெருத் தணிமுடி மாதர்த் தோழி 85
கயிலெருத் தசைத்த கைய ளாகித்
தாழியுண் மலர்ந்த தண்செங் குவளை
ஊழுறு நறும்போ தொருகையிற் பிடித்து
விண்ணக மருங்கின் வேமா னியர்மகள்
மண்ணகத் திழிதர மனம்பிறழ்ந் தாங்குக் 90
கன்னிக் கடிநகர்ப் பொன்னிலத் தொதுங்கி
விடுகதிர் மின்னென விளங்குமணி யிமைப்ப
இடுமணன் முற்றத்து மெல்லென விழிதர
வாயில் போந்து வைய மேறிற்
சாய னோமெனத் தாயகட் டெடுத்துப் 95
பதுமாபதி வையமேறிக் காமன் கோயில் செல்லல்
[தொகு]போற்றுப்பல கூற வேற்றுவன ளிருப்பப்
பாகனை யொழித்துக் கூன்மகள் கோல்கொளப்
பொதியிற் சோலையுட் கதிரெனக் கவினிய
கருங்கட் சூரற் செங்கோல் பிடித்த
கோற்றொழி லாளர் மாற்றுமொழி விரவி 100
நலத்தகு நங்கை போதரும் பொழுதின்
விலக்கரும் வேழம் விடுதி ராயிற்
காயப் படுதிர் காவலன் பணியென
வாயிற் கூறி வழிவழி தோறும்
வேக யானைப் பாகர்க் குணர்த்தி 105
உட்குவ ருருவங் கட்புல மருங்கிற்
காண விடாஅ ராணையி னகற்றிக்
கச்சுப்பிணி நுறுத்துக் கண்டகம் பூண்ட
அச்சுறு நோக்கி ன்றுபது கழிந்த
காஞ்சுகி மாக்கள் சேர்ந்துபுடை காப்பக் 110
கண்டோர் விழையுந் தண்டாக் காதலொ
டருந்தவ முண்மை யறிமி னீரெனப்
பெருஞ்சாற் றுறூஉம் பெற்றியள் போலப்
பைந்தொடி மகளிர் நெஞ்சுநிறை யன்பொடு
வண்ண மலருஞ் சுண்ணமுந் தூவ 115
அநங்கத் தானத் தணிமலர்க் காவிற்
புலம்படை வாயில் புக்கனள் பொலிந்தென்.
3 5 பதுமாபதி போந்தது முற்றிற்று.