பெருங்கதை/3 7 கண்ணுறு கலக்கம்
- பாடல் மூலம்
3 6 கண்ணுறு கலக்கம்
சூரியன் அத்தமித்தல்
[தொகு]சேயிழைக் கூன்மகள் செவ்வனங் கூறிப்
போகிய பொழுதி னாகிய சூழ்ச்சி
உரும்பெறற் றோழரைப் பொருந்தலும் பொருக்கெனப்
பகலிடம் விளக்கிய பருதியஞ் செல்வன்
அகலிடம் வறுவி தாக வத்தத் 5
துயர்வரை யுப்பாற் கதிர்கரந் தொளிப்ப
மாலைக்காலம்
[தொகு]ஆண்கட னகற லதுநோன் றொழுகுதல்
மாண்பொடு ப்ணர்ந்த மாசறு திருநுதற்
கற்புடை மகளிர் கடனெனக் காட்டி
வினைக்கும் பொருட்கு நினைத்துநீத் துறையுநர் 10
எல்லை கருதிய திதுவென மெல்லியற்
பணைத்தோண் மகளிர்க்குப் பயிர்வன போல
மனைப்பூங் காவின் மருங்கிற் கவினிய
பைந்தார் முல்லை வெண்போது நெகிழ
வெறுக்கைச் செல்வம் வீசுத லாற்றாது 15
மறுத்துக் கண்கவிழ்ந்த மன்னர் போல
வாச மடக்கிய வாவிப் பன்மலர்
மாசி லொள்ளொளி மணிக்கண் புதைப்பப்
பெருமை பீடற நாடித் தெருமந்
தொக்க லுறுதுய ரோப்புத லுள்ளிப் 20
பக்கந் தீர்ந்த பரிசில ருந்தவாச்
செறுமுகச் செல்வரிற் சேராது போகி
உறுபொரு ளுள்ள துவப்ப வீசி
வெறுவது விடாஅ விழுத்தகு நெஞ்சத்
துரத்தகை யாளர் சுரத்துமுதற் சீறூர் 25
எல்லுறு பொழுதிற் செல்ல லோம்பி
மகிழ்பத மயின்றிசி னாங்கு மல்லிகை
அவிழ்தா தூதி யளிதுயி லமரக்
கழனி யாரல் கவுளகத் தடக்கிப்
பழன மருதிற் பார்ப்புவாய் சொரிந்து 30
கருங்கா னாரை நரன்றுவந் திறுப்பத்
துணைபிரி மகளி ரிணைமலர் நெடுங்கண்
கட்டழன் முத்தங் காலப் பட்டுடைத்
தணிக்கா ழல்குற் பனிப்பசப் பிவர
அழல்புரை வெம்பனி யளைஇ வாடை 35
உழல்புகொண் டறாஅ தொல்லென் றூர்தரச்
செங்கேழ் வானக் கம்பலம் புதைஇ
வெங்க ணீர தாகி வேலிற்
புன்கண் மாலை போழத் தன்கண்
உதயணன் வருந்துதல்
[தொகு]தீராக் கற்பிற் றேவியை மறந்து 40
பேராக் கழற்காற் பெருந்தகை புலம்பிப்
பைவிரி யல்குற் பதுமா பதிவயிற்
கைவரை நில்லாக் காம வேகம்
அன்றுமுத லாகச் சென்றுமுறை நெருங்கப்
பவழமு மணியும் பாங்குபட விரீஇத் 45
திகழ்கதிர்ப் பசும்பொற் சித்திரச் செய்கை
வனப்பமை வையந் தனக்குமறை யாகிய
கஞ்சிகை கடுவளி யெடுப்ப மஞ்சிடை
வானர மகளிரிற் றானணி சுடர
முகைநலக் காந்தண் முகிழ்விர னோவத் 50
தகைமலர்ப் பொய்கைத் தண்செங் கழுநீர்
சில்லெனப் பிடித்து மெல்லென விழிந்து
நண்ண வருவோள் போலு மென்கண்
ஆற்றே னவட னஞ்சாந் திளமுலை
நோற்றே யாயினு நுகர்வல் யானெனத் 55
தெய்வ நல்யாழ் கையமைத் தியற்றிய
ஐதேந் தல்கு லவந்திகை வீவும்
உறுதுணைத் தோழ னிறுதியு நினையான்
மாண்ட சூழ்ச்சி மந்திர வமைச்சர்
வேண்டுங் கொள்கைய னாகி நீண்ட 60
தடம்பெருங் கண்ணி தகைபா ராட்டி
உறுவகை யண்ண ற்றுகண் பொருந்தலும்
கைவயிற் கொண்ட கழுநீர் நறும்போது
கொய்மலர்க் கண்ணி கொடுப்போள் போலக்
கனவிற் றோன்றக் கண்படை யின்றி 65
நனவிற் றோன்றிய நறுநுதற் சீறடி
மைவளர் கண்ணியை யெய்தும் வாயில்
யாதுகொ லென்றுதன் னகத்தே நினைஇ
வெங்கனன் மீமிசை வைத்த வெண்ணெயின்
நெஞ்ச முருக நிறுத்த லாற்றான் 70
காவினுட் காவலன் கலங்கக் கோயிலுட்
பதுமாபதி வருந்துதல்
[தொகு]பாசிழை யல்குற் பாவையும் புலம்பித்
தாயில் கன்றி னாய்நலந் தொலைஇப்
புகையினுஞ் சாந்தினுந் தகையிதழ் மலரினும்
வாசங் கலந்த மாசி றிருமனை 75
ஆயஞ் சூழ வமளியு ளேறி
நறுமலர்க் காவினுட் டுறுமிய பூந்துணர்க்
கொடிக்குருக் கத்திக் கொழுந்தளிர் பிடித்து
நாண்மலர் புன்னைத் தாண்முத லணைந்து
பருகு வன்ன நோக்கமொடு பையாந் 80
துருகு முள்ளமோ டொருமர னொடுங்கி
நின்றோன் போலவு மென்றோள் பற்றி
அகலத் தொடுக்கி நுகர்வோன் போலவும்
அரிமலர் நெடுங்க ணகவயிற் போகாப்
புரிநூன் மார்பன் புண்ணிய நறுந்தோள் 85
தீண்டும் வாயில் யாதுகொ லென்றுதன்
மாண்ட சூழ்ச்சி மனத்தே மறுகி
ஆசி லணியிழை தீயயல் வைத்த
மெழுகுசெய் பாவையி னுருகு நெஞ்சினள்
பள்ளி கொள்ளா ளுள்ளுபு வதிய 90
இருவயி னொத்த வியற்கை நோக்கமொ
டொருவயி னொத்த வுள்ள நோயர்
மல்லற் றானை வத்தவர் மன்னனும்
செல்வப் பாவையுஞ் செய்திற மறியார்
கொல்வது போலுங் குறிப்பிற் றாகி 95
எல்லி யாம மேழிருள் போலப்
சந்திரன் அத்தமித்தல்
[தொகு]பசுங்கதிர்த் திங்கள் விசும்பளந் தோடிக்
கடுங்கதிர்ரஃக் கனலி கக்குபு போகித்
தானொளி மழுங்கி மேன்மலை குளிப்ப
விடியற்காலம்
[தொகு]மீன்முகம் புல்லென வா….னா … கை 100
தெளிமணி விளக்கு மளிமலர்ப் பள்ளியுட்
புலப்பிற் றீரக் கலப்புறு கணவரை
முயக்கிடை விடாஅச் சுடர்க்குழை மகளிர்
தோன்முதற் புணர்ச்சி யிரியத் துட்கென
வாண்முக மழுங்க வலியற வராவும் 105
வைவாள் போலும் வகையிற் றாகி
வெள்வேல் விடலையொடு விளங்கிழை மாதர்க்குச்
செந்தீக் கதீஇய வெந்தழற் புண்ணினுட்
சந்தனச் சாந்திட் டன்ன தண்மையொடு
வந்தது மாதோ வைக லின்றென் 110
3 7 கண்ணுறு கலக்கம் முற்றிற்று.