பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்O50

“யார் வெற்றியைப்பற்றிப்பேசுகிறார்கள்? எதையும் தாங்கும் இதயமே வாழ்க்கை” என்று கூறிப் பெரு மூச்சு விடுகிறார் ரில்க்.

பொதுவாகக் கவிஞர்கள் உலகில் உள்ள பருப் பொருள்களைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அதற்கேற்ப உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் ரில்க்கின் கவிதையாற்றல் அதற்கு நேர்மாறானது. அவரது ஆன்மீக உள்ளம் எப்போதும் அக்க் காட்சிகளிலேயே ஈடுபட்டிருக்கும். குறிப்பாக உலகத் துன்பங்களால் பாதிக்கப்பட்டு வருந்திக் கலையிடம் அடைக்கலம் புகும்போது அவருள்ளத்தில் அகக் காட்சிகள் நிறையத் தோன்றும் அக்காட்சிகள் வெளிப்படுத்தும் உள்ளுணர்வுகளுக்கு ஒப்பான புறக் காட்சிகளை வெளியுலகில் தேடுவார். பிறகு இர்ண்டையும் பிரிக்க முடியாதபடி ஒன்று படுத்துவார். புறவுலகில் காணப்படும் அசையாப் பொருள்கள் கூட, அவருள்ளத் துணர்ச்சிகளோடு உறவாடும் உயிரினங்களாகத் தென்படுகின்றன.

வீடு பாத்திரம் ஓடை கதவு
பலகணி பாலம் பழமரம் என்று
வெறுமையாய்க் குறிப்பிடுகிறோம்
நான் கூறுகிறேன
புரிந்து கொள்ளுங்கள்.
இப் பொருள்கள்
எனக்கு-
எவ்வளவு நெருக்கமானவை என்று
அவைகளே நினைத்திருக்க முடியாது.

[டியூனோ இரங்கற்பா]

‘கவிஞன்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையில், தமது அகக் காட்சிகள் புலப்படுத்திய நுண்ணுணர்வுகளை ஆர்ஃபிசோடு தொடர்புபடுத்தி கனவு போல் சித்தரிக்கிறார் ரில்க்.

கடவுள் ஆற்றல்மிக்கவர்
சாதாரண மனிதன்
தெய்வீக யாழிசையைத்
தொடர்ந்து வர முடியுமா?

அவன் அறிவு
குழம்பிப் போயிருக்கிறது.
மேலும்-
இதயப் பாதையின் குறுக்கே
அப்போலோவின்
கோவில் கிடையாது
பாடுதல்
ஒரு விருப்பமோ
அல்லது
எளிதில் கிட்டும்
காதற் சந்திப்போ அன்று.