உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

இடையே இருந்தும் கலை உறவு காரணமாக எல்லோராச் சிற்பத்திற்கும்,மாமல்லபுரச் சிற்பத்திற்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது.

கலை வளர்த்த பல்லவர்கள் அடிச்சுவடு பற்றி சோழர்களும் நாயக்க மன்னர்களும் சிற்பக் கலைக்குத் தக்கத் துணையாக இருந்திருக்கிறார்கள். சித்திரக் காரப் புலி மகேந்திரவர்மப் பல்லவனை அவன் மகன் சிற்பப்புலி மாமல்லன் விஞ்சியது போல, தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய ராஜராஜன் புகழை அவன் மகன் ராஜேந்திரன், கங்கை கொண்ட சோழன் மங்கச் செய்திருக்கிறான். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு அழகிய கோயிலைக் கட்டி அங்கு நல்ல சிலைகளையும் நிர்மாணித்து கும்பகோணம், தாராசுரம் முதலிய இடங்களில் எல்லாம் வடநாட்டுப் பெண்களையெல்லாம் - தூக்கியடிக்கக் கூடிய வகையில் பல பெண்ணுருவங்கள் தோன்றி இருக்கின்றன. கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள அரசிளங்குமரி, அர்த்தநாரி, பிக்ஷாடனர் சிலைகளைப் பார்த்தால் ஏதோ அஜந்தாவில் உள்ள சித்திரங்களே உயிர்பெற்று அடிபெயர்ந்து நடந்து விட்டனவோ என்று தோன்றும்.

இன்றும் மதுரை, திருநெல்வேலி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் காணும் உயிரோவியங்களைப் பார்த்தால் அவைகளுக்கும் மவுண்ட் அபூவில் உள்ள டில்வார் கோயிலின் சிலைகளுக்கும் ஒரு ஒற்றுமை. தோன்றும். இரண்டிடத்திலும் வெகு நுணுக்கமான வேலைப்பாடுகள் இருக்கக் காண்போம். மதுரையில் உள்ள சிலைகளோ ஆந்திர நாட்டு லெபாக்ஷியின்

88