பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143lமுருருசுந்தரம் எதிரில் வந்து நின்ருள். மீண்டும் பாவேந்தர் அந்தப் பெண்ணிேயே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். "என்ன ஐயா! நீண்ட நேரம் இப்படியே இந்தம் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் படத்தில் இந்தப் பெண்ணுக்கு வாய்ப்புக் கொடுக்கம் போகிறீர்க்ளா?’ என்று தான் மெதுவாகக் கேட்டேன். ஏதோ கனவிலிருந்து விடுபட்டவர் போல னங்களைப் பார்த்து விட்டு. பாரதியார் மனைவி செல்லம்மாள், வயசில் இந்தப்பெண் மாதிரி தான் இருப்பாங்க’ என்று சொன்ஞர் பாவேந்தர். உடனே அங்கிருந்த அத்தன்ை கண்களும் ஆர்வத்தோடு அந்தப் பெண்ணையே உற்றுப் பார்க்கத் தொடங்கின. அந்தப்பெண் மேலும் நாணிள்ை. Cl பாவேந்தர் பிற்பகல் மூன்று மணிக்குமேல், தேநீர் அருந்திவிட்டு மான் தோல் விரித்த சோஃபாவில் வந்து அம்ர்வது வழக்கம். மாலையில் இலக்கிய அன்பர்கள் சிலர் அவரைத்தேடி வருவார்கள்.அரசியல், இலக்கியம் -இரண்டும் அவள் பேச்சில் மிகுதியாக அடிபடும். தமிழ் இலக்கியத்தில் அவரே சில ஐயங்களைக் கிளப்பி விளக் கமும் சொல்வார்; மற்றவர் எழுப்பும் ஐயங்களுக்கும் விளக்கம் தருவார். ஒருநாள்... மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பார்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி? என்றசித்தர் பாட்டு வரிகளை எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் சொன்னர். மாங்காய்ப்பால்சாப்பிட்டு விட்டு நீண்ட நான் உயிரோடு இருக்க முடியுமா? இதில் ஒரு தத்துவம் இருக்கிறது. ஞானி உட்கார்ந்தால் பலமாதம் சர்ப்பிட மாட்டான். எப்படி? அவன் உடலிலிருந்தே அவனுக்கு உணவு கிடைக்கிறது. மூளையிலிருந்து சுரக்கும் ஒருவகை நீர் அவனை வாழவைக்கிறது’ என்ருர் பாவேந்தர், Q