பெருங்கதை/4 1 கொற்றம் கொண்டது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்
நான்காவது
வத்தவ காண்டம்
4 1 கொற்றங் கொண்டது

உதயணன் வருடகாரன் முதலியோர்க்குச் சிறப்புச் செய்தல்[தொகு]

பகைமுத லறுத்துப் பைங்கழ னோன்றாள்
வகைமிகு மான்றேர் வத்தவர் கோமான்
வருட காரன் பொருடெரி சூழ்ச்சி
பொய்யாது முடித்தலின் மெய்யுறத் தழீஇ
ஏறிய யானையுந் தன்மெய்க் கலனும் 5
கூறுபட லின்றிக் கொடுத்தனன் கூறி
அறைபோ மிவனென வாருணி யுரைத்த
குறையா விழுப்பொரு ளன்றே கொடுத்துத்
தரும தத்தனைத் தோண்முதல் பற்றிப்
பரும யானையொடு பாஞ்சால ராயனை 10
வெங்களத் தட்ட வென்றி யிவையென
நெய்த்தோர்ப் பட்டிகை யாக வைத்துப்
பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து
நன்னாட் கொண்டு துன்னினர் சூழ
வெங்கண் யானைமிசை வெண்குடை கவிப்பப் 15
பொங்குமயிர்க் கவரி புடைபுடை வீசக்
கங்கை நீத்தங் கடன்மடுத் தாங்குச்
சங்கமுந் துரமு முரசினோ டியம்ப
மன்பெரு மூதூர் மாசன மகிழ்ந்து
வாழ்த்து மோசை மறுமொழி யார்க்கும் 20
கேட்பதை யரிதாய்ச் சீர்த்தகச் சிறப்ப
ஊழி தோறு முலகுபுறங் காத்து
வாழிய நெடுந்தகை யெம்மிடர் தீர்க்கெனக்
கோபுரந் தோறும் பூமழை பொழியச்
சேயுயர் மாடத்து வாயில் புக்குத் 25
தாம மார்ப னாருணி தன்னோ
டீம மேறா வியல்புடை யமைதியர்க்
கேம மீத்த வியல்பின னாகிக்
கழிந்தோர்க் கொத்த கடந்தலை கழிக்கென
ஒழிந்தோர்க் கெல்லா மோம்படை சொல்லி 30
வேறிடங் காட்டி யாறறிந் தோம்பி
வியலக வரைப்பிற் கேட்டோர் புகழ

உதயணன் சிங்காதனமேறி வீற்றிருத்தல்[தொகு]

உயர்பெருந் தானை யுதயண குமரன்
அமைச்சினு நண்பினுங் குலத்தினு மமைதியிற்
பெயர்த்துநிலை யெய்திப் பேருந் தழீஇ 35
…..
முதற்பெருங் கோயின் முந்துதனக் கியற்றி
மணிப்பூண் கண்ணியர் மரபறி மாந்தர்
முட்டில் கோலமொடு காட்டில் படுப்ப
நோற்றார் விழையு நாற்பான் மருங்கினும்
முழவொலிச் சும்மையொடு முரசங் கறங்க 40
விழவியல் சும்மையொடு வியனகர் துவன்றிக்
குடியுங் குழுவு மடியுறை செய்ய
ஏவல் கேட்குங் காவல ரெல்லாம்
பெருந்திறைச் செல்வமொ டொருங்குவந் திறுப்பக்
களம்படக் கடந்து கடும்பகை யின்றி 45
வளம்படு தானை வத்தவர் பெருமகன்
மாற்றார்த் தொலைத்த மகிழ்ச்சியொடு மறுத்தும்
வீற்றிருந் தனனால் விளங்கவை யிடையென்.

4 1 கொற்றங் கொண்டது முற்றிற்று.