இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமயந்தியும் வஸந்தராவும்
143
அவரது மனதில் தோன்றி வருத்தின. அந்த வேதனையைப் பொறுக்க மாட்டாதவராய் அவர் திரும்பவும் சோர்வடைந்து நித்திரையில் ஆழ்ந்தார்.
மல்லிகாவே அவரை விட்டு வந்து ஸஞ்சலாட்சி என்னும் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும், நடந்தவை எல்லாம் பீமராவின் சூதென்றும், தமயந்தி உறுதியாக நினைத்தாள். ஆனால், அவர் மல்லிகாவின் பிரேதத்தைப் பார்த்ததாகச் சொன்னது மாத்திரம் அவளது மனதில் ஒருவகையான சந்தேகத்தை உண்டாக்கிய வண்ணமிருந்தது. அவ்வாறே குழம்பிய மனதோடு அவள் நின்று கொண்டிருந்தாள்.