உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டி வைக்கும் தரகர்

235

தம : அகப்பட்டிருக்கிறது. அதனாலேதான் விசனமான சங்கதி என்றேன்.

வஸ : எனக்கு இதனால் விசனமே கிடையாது. சாஸனம் எங்கிருந்து கிடைத்தது?

தம : பவானியம்மாள்புரம் பங்களாவிலேயே பெட்டியிலிருந்து அகப்பட்டது.

வஸ : யார் கண்டு பிடித்தது?

தம : நானே கண்டு பிடித்தேன்.

வஸ : (கவலைப்படாமல்) அப்படியா! அவர் கடிதத்தி லேயே எழுதியிருக்கிறார். இப்படி இருக்கும் என்று நானும் முன்னாகவே சந்தேகித்ததுதானே! இது புதுமையானதல்லவே! சரி; இனி நான் பவானியம்மாள்புரத்தின் ஜெமீந்தாரல்ல.

தம : ஏன் அப்படி? சொந்தக்காரர் ஒப்புக் கொள்ளும் வரையில் நீங்கள்தானே ஜெமீந்தார். இவ்வளவு அபாரமான செல்வத்தைச் சுலபத்தில் கொடுத்துவிட யாருக்குத்தான் மனம் வரும்.

வஸ : ஏன்? கொடுக்காமல் என்ன செய்ய முடியும்? அவர் பேரில் உண்மையான சாஸனம் எழுதப்பட்டிருந்தால், உடனே நான் எல்லாவற்றையும் ஒப்புவித்து விடுவேன். இதில் வியாஜ்ஜியமென்ன இருக்கிறது, வழக்கென்ன இருக்கிறது?

தம : அப்படியானால் சாஸனத்தைக் காட்டினால் உடனே தாங்கள் யாவற்றையும் கொடுத்து விடுவீர்களா?

வஸ : தடையில்லை . அவசியம் கொடுத்து விடுவேன். அவர் எங்கிருக்கிறார்?

தம : அவரல்ல. அவள்.

வஸ : அப்படியா! (யோசனை செய்தவண்ணம்) இறந்து போன ஜெமீந்தாருக்கு என்னைவிட அதிக நெருக்கமான உறவினள் எவளிருக்கிறாள்?

தம : அவர் கடைசியாக ஓர் ஏழை ஸ்திரீயைக் கலியாணம் செய்து கொண்டு, அவளை ரகஸியமாக வைத்திருந்தாரல்லவா? அவளுடைய வயிற்றில் பிறந்த பெண்ணின் பெண்ணாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/253&oldid=1234064" இலிருந்து மீள்விக்கப்பட்டது