பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பூர்ணசந்திரோதயம்-2 ஷண்முகவடிவு பிரமிப்படைந்தாள். அப்படி வந்தவள் சுமார் பதினாறு வயதடைந்தவளாகக் காணப்பட்டாள். அவளது வடிவம் சுவர்ண பிம்பம் போலக் காந்தியும் கட்டழகும் வாய்ந்ததாகக் காணப்பட்டது. அவளது முகம் நிரம் பவும் வசீகரமாகவும் எப்படிப்பட்டவரது மனதையும் எளிதில் கவரக் கூடியதாகவும் இருந்தது. அவளது உடம்பு சிவப்பாகவும் மிருதுத் தன்மை பொருந்தியதாகவும், மினுமினுப்பாகவும் இருந்தது. அவள் பிறந்தது முதல் நல்ல செல்வத்திலிருந்து செழுமையாகவும் செல்வமாகவும் வளர்க்கப்பட்டவள் போலவும் பெரிய மனிதர் வீட்டுப் பெண் போலவும் காணப்பட்டாள். அவள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்து ஜாஜ் வல்லியமான தோற்றத்தோடு இருந்தாள். அவ்வாறு பிரசன்னமான உன்னத மங்கையைக் கண்டவுடனேயே ஷண்முகவடிவின் முகம் வாட்டமடைந்து மாறியது. தனது காதலனான கலியாணசுந்தரம், யாரையோ அநாதைப் பெண்ணைக் கண்டு அழைத்து வந்ததாகத் தனது கடிதத்தில் எழுதி இருந்ததற்கும், அந்தப் பெண்ணின் கம்பீரத் தோற்றத்திற்கும் கொஞ்சமும் பொருத்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. அந்த ஒரு நிமிஷத்திற்குள் அவளது மனம் பலவகையான சந்தேகங்களைக் கொண்டுவிட்டது. தான் கலியாணசுந்தரத்தைக் கலியாணம் செய்துகொள்வதற்கு உண்மையில் அந்தப் பெண் பகையாளியாக வந்துவிட்டாள் என்கிற அச்சமே எழுந்து ஷண்முகவடிவின் மனதை உலப்பத் தொடங்கியது. இருந்தாலும், இடையிடையே அதற்கு ஒருவித ஆட்சேபனையும் தோன்றி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தது. அப்படிக் கலியாணசுந்தரம் தன்னைக் கைவிட்டு அந்தப் புதிய பெண்ணைக்கட்டிக் கொள்ளநினைத்திருந்தால், அவன் தனக்குக்கடிதமே எழுதி இருக்கமாட்டான்.ஆகையால், அவளது மனதில் ஒருவித நம்பிக்கையும் இருந்து வந்தது. எல்லாவற்றிற்கும் தான் அவர்களோடு பேசி, கலியாணசுந்தரம் விவரமாக எழுதியனுப்பி இருப்பதாகச் சொல்லும் கடிதத்தை