பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம்-டு) வற்புறுத்தி இருக்கலாம். அதையும் இந்திரா காந்தி செய்யவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டுக் கராச்சி விமான நிலையம் வந்ததும், காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமையைத் தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று துணிச்சலாகப் புட்டோதம் கருத்தை வெளியிட்டார். 1984ஆம் ஆண்டு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ஃபாரூக் அப்துல்லாவின் அரசைக் கலைத்துவிட்டு, அவ்விடத்தில் ஊழல் மிக்க குல்ஷா தலைமையில் ஒரு பொம்மை அரசை இந்திரா காந்தி உருவாக்கினார். இச்செயல், திறமையான முதல்வரிசை அரசியல்வாதிகளை அரசியல் நீரோட்டத்திலிருந்து ஒதுங்கியிருக்கும்படி செய்துவிட்டுத் தீவிரவாதத்தை மேலும் தூண்டிவிட்டது. இந்திரா காந்தியின் வெளிநாட்டுக் கொள்கை காஷ்மீர்ப் பிரச்சனையில் மோசமான திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் மாஸ்கோ தலையிட்டு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டபோது இந்திரா காந்தி அதற்குக் கண்டனம் தெரிவிக்கத் தயங்கினார். - - அமெரிக்காவும், தொழில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளும் இந்திய உறவை விட்டு ஒதுங்கிச் செல்வதற்கு , இது காரணமாயிற்று. இச்சூழ்நிலையைப் பாகிஸ்தான் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு காஷ்மீர்த் தீவிரவாதிகளுக்குத் தேவையான போர்க் கருவிகளையும் மற்ற உதவிகளையும் அமெரிக்காவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் பெற்றுக் கொண்டது. நாடு சுதந்தரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை காஷ்மீருக்காக ஒரு லட்சம் கோடி உருபாவுக்கும் மேல் இந்திய அரசு செலவிட்டிருக்கிறது.