பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 277 தாக்கியது. நான் உடனே எழுந்து உட்கார்ந்து கொண்டேன். உடம்பு முழுதும் வியர்வை வெள்ளமாக வழிந்து ஒடுகிறது. பசியினாலும் தாகத்தினாலும் கண்கள் இருளுகின்றன. உடம்பு தவிக்கிறது. எங்கு பார்த்தாலும் கடுமையான வெயில் வீசி நெருப்புக் குழம்பைக் கக்குகிறது. அந்த நிலைமையில் எழுந்து எந்தத் திக்கிலாவது நடக்கலாம் என்றால், நிரம் பவும் பயமாக இருந்தது. ஆகையால், நான் மெதுவாக எழுந்து, மரத்தின் அப்புறத்தில் நிழலிருந்த இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டு பொழுதைப் போக்கினேன். அதன்பிறகு பகல் நான்கு மணி நேரம் இருக்கலாம். வெயில் பொறுக்கும் படியான நிலைமையில் இருந்தது. பசி தாகத்தினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டே அவ்விடத்தில் சும்மா உட்கார்ந்திருப்பதை விட எழுந்து ஏதாவது ஒரு திக்கில் நடந்து போனால், நான் ஏதாவது ஒர் ஊரை அடைந்து ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஆகாரம் தண்ணிர் முதலியவைகளுக்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம் என்று நினைத்து எழுந்து ஏதோ ஒரு திக்கை நோக்கி நடக்கலானேன். அப்படி நான் சுமார் இரண்டு மைல் தூரம் நடந்திருப்பேன். அவ்விடத்தில் புஞ்சைப் பயிர்கள் நிறைந்த வயல்களும் பனந்தோப்புகளும் ஆரம்பமாயின. அவ்விடத்துக்குப் பக்கத்தில் ஏதாவது ஊர் இருக்க வேண்டும் என்ற ஒரு தைரியம் உடனே உண்டாயிற்று. ஆகையால், நான் வயல்களின் வழியாக நடந்து கொண்டே போனேன். ஒரு மனிதர்கூட என் கண்ணில் படவில்லை. தண்ணிர் இருக்கக்கூடிய இடமே காணப்பட வில்லை. கால்கள் பின்னுகின்றன. தாகத்தின் வெப்பத்தைப் பொறுக்கமாட் டாமல் என்னுடைய மார்பு இரண்டாக விரிந்து போகும் போலாய் விட்டது. அந்த மகா கஷ்டமான நிலைமையில் நான் நடந்துகொண்டே போக சூரியன் அஸ்தமித்து விட்டான். கொஞ்ச நேரத்தில் இருளும் வந்து சூழ்ந்துகொண்டது. அதற்கு மேல் என்னால் நடக்க முடியவில்லை. அவ்விடத்தில் ஒரு வயலின் பக்கத்தில் காய்ந்து