பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 41 அதைக் கேட்ட பெண்ணரசி மிகுந்த நாணமும், கலக்கமும் கொண்டவளாப் ப் பேசத் தொடங்கி, நான் எப்படியும் குளத்தங்கரைக்குப் போய்விட்டுத்தான் வரவேண்டும். அந்த முரடர்கள் என்னிடம் வந்து உன்னை உபத்திரவித்தால், நான் பெரிய பண்ணைப் பிள்ளையின் வீட்டுக்குப் போகவில்லை யென்றும், குளத்தங்கரைக்குப் போய் விட்டுத் திரும்பி மடத்துக்குள் வந்து விடுவதாகவும் சொல்லி அவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். என்ன செய்கிறது! அவசரமாக நான் போகவேண்டி இருக்கிறது. குளம் வடக்குப் பக்கத்தில் இருக்கிறதா? தெற்குப் பக்கத்தில் இருக்கிறதா? அதை மாத்திரம் சொல்லுங்கள். நான் மறைவாகப் போய்விட்டு, இதோ ஒரு நொடியில் திரும்பி வந்துவிடுகிறேன்' என்று நயமாக இறைஞ்சிக் கூறியவண்ணம் காலை மெதுவாக எடுத்து நிலைப்படிக்கு வெளியில் வைத்தாள். அவளது உடம்பு மிகவும் தத்தளித்தது. ஆகையால், அவள் உண்மையிலேயே ஏதோ தேக பாதையால் துன்பப்படுகிறாள் என்று நம்பிக்கை சாமியாரினது மனதில் உண்டாயிற்று. அதற்கு மேலும் ஆட்சேபித்து அவளைத் தடுப்பது சரியல்ல என்று நினைத்த போலிச்சாமியார், 'அப்படியானால், நான் உன்னைத் தடுப்பது ஒழுங்கல்ல. இதோ இந்த மடத்திற்கு வடக்குப் பக்கத்தில் குளம் இருக்கிறது. எங்கும் ஒரே இருளாக இருப்பதால் நீ அதிக தூரம் விலகிப் போக வேண்டும் என்பதில்லை. சமீபத்திலேயே விலகி விட்டு சீக்கிரமாகத் திரும்பி வந்துவிடு. நானும் வாசலில் வந்து ஜாக்கிரதையாக நின்றுகொண்டிருக்கிறேன்' என்று மிகவும் உருக்கமாகக் கூறியவண்ணம், குளமிருந்த திக்கைக் காட்ட, அதுகாறும் நெருப்பின்மேல் நிற்பவள்போலப்பதைபதைப்பாக நின்று கொண்டிருந்த ஷண்முகவடிவு நிலைப்படியைக் கடந்து வெளியில் போய் குறட்டை விட்டு வாசல் தரையில் இறங்கி வடக்குப் பக்கமாகத் திரும்ப, அதுவரையில், திண்ணையின் கீழே மறைந்துகொண்டிருந்த ஒர் ஆள்குனிந்தபடியே ஒட்டமாக ஒடி அப்பால் போய் மறைந்துகொண்டதை ஷண்முகவடிவு