24 மண்ணியல் சிறுதேர் நிகழ்ச்சிகளை மேடையில் அமைத்துக்காட்டி) மீறியமை, பார்ப்பனத் தலைமகன் கணிகை குலத்துப் பாவையை மணக்கும் புதுமை, ஏறத்தாழ முப்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ள போக்கு, புத்தசமயச் செல்வாக்கு, தீப்புகும் பழக்கம், மனுநீதி போற்றப்படுதல் ஆகிய இவை . யெல்லாம் மிருச்சகடிகத்தை ஒளிக்காமல் ஒரு பழமை வாய்ந்த நாடகம் என்று காட்டிக்கொடுக்கின்றன. 3 மூலம் 'சாகுந்தலத்தின் உட்பொருள் (Theme) யாவர்க்கும் தெரிந்ததும் மாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்டதும் ஆகும். எனினும் அந்நாடகம் காளிதாசன் கைவண்ணத்தால் வியக்கத்தக்க புதுமலர்ச்சியோடு விளங்குகிறது. மாபாரதத்தில் துசியந்தன் காமுகனைப்போல் காட்சி தருகிறான்; துரசோடும் மாசோடும் தோன்றுகிறான். காளிதாசன் அவன்மீது படிந்துள்ளதுசைத் துடைக்கிறான் - சாகுந்தலத்தில். புளுடார்க்(Plutarch) என்பவர் கி.பி. முதல் நூற்றாண்டினிறுதியில் கிரேக்க மொழியில் எழுதிய 'பெரியார் வாழ்க்கை வரலாறுகள் என்னும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை மூலமாகக் கொண்டு தனக்கேயுரிய தனித்தன்மையோடு ஜூலியஸ் சீசர் போன்ற நாடகங்களை சேக்ஸ்பியர் படைத்துள்ளார்." புளுடார்க்கின் துருப்பிடித்த இரும்பைப் போன்ற கதைக் குறிப்புக்கள் சேக்ஸ்பியரின் மந்திரக்கோலால் பொன் னாகிப் பொலிவோடு திகழ்கின்றன. எனவே ஒரு நாடக அர. சு.நாராயணசாமி நாயுடு, ஜூலியஸ் சீசர், ப. V
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/26
Appearance