உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 61 என்னும் (வசந்தசேனையின்) யானையை அடக்கித் தான் வென்றதாகவும் தன் வீரத்தைப் போற்றி யாரோ ஒருவர் மேல்ாடை ஒன்றைப் பரிசளித்துச் சென்றதாகவும் வசந்தசேனையிடம் கூறுகிறான். அம்மேலாடை சாதிமலர் களால் மணமூட்டப்பட்ட சாருதத்தன் மேலாடை என்றறிந்து அதனை ஆவலுடன் வாங்கித் தன் பாலாடை மேனியில் போர்த்துக் கொள்கிறாள். அதைக் கண்ட கன்னபூரகன் 'இம்மேலாடை பெருமாட்டிக்கு அழகு செய்கின்றது' என்கிறான். அவள் அணிகலன் ஒன்றைப் பரிசாயளித்ததும் 'இப்பொழுது பெருமாட்டிக்கு மேலாடை நன்றாக அழகு செய்கின்றது" என்றுரைத்துச் சாருதத்தன் வீதியில் செல்வதாகக் கூறுகிறான். வசந்த ச்ேனை மாடத்தில் ஏறித் தன் மன ஓடத்தில் வீற்றிருப் பவனைப் பார்க்கப் போகிறாள். இங்கே இரண்டாம் அங்கம் முடிகிறது. சாருதத்தனின் (முன்னாள்) பணியாளனும் வசந்த சேனையின் பணியாளனும் தோன்றும் கிளை நிகழ்ச்சிகள் (Episodes) வசந்தசேனையின் காதலை மிகுதிப்படுத்தப் பயன்படுகின்றன. ‘மேருவின் உச்சியில் ஏற்றி வீழ்த்தல் போல் சாரும் சூதின் இயல்பையும், சூதர் இயல்பையும் விரித்துரைக்கும். இவ்வங்கம் 'சூதர்நிலை என்னும் ஏற்ற பெயர் பெற்றுள்ளது. பாழ்ங்கோயிலில் ஒளிந்திருக்கும் சம்வாககனை மாதுரனும் சூதனும் கண்டுபிடிக்கும் விதம் வேடிக்கையாயிருக்கிறது. சம்வாககனுக்காக வசந்த சேனை வளையலைக் கொடுத்தனுப்பியவுடன் அவனை மாதுரன் குலமகன் என்று குறிப்பதும் மீண்டும் சூதாட அவனுக்கு அழைப்பு விடுப்பதும் இன்னும் வேடிக்கையா யிருக்கிறது. மேலும் தருத்துரகன் கூற்றிலிருந்து மாதுரன்