இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'விலைவாசி ஏற்றம் விஷம்போல்...' என்கிறோம் ஏறுகின்ற இந்த விஷத்தை இறக்க முடிகிறதா? குறைக்க முடிகிறதா? மனித விஷத்துக்கு மருந்தில்லை என்றிருந்தால் சீறும் பாம்பும் சிரிக்கத்தான் செய்யும்! Ο பாலநாகம்மா காலமுதல் திரையுலகில் பாம்பை வைத்துத்தான் பல கதைகள்; பலப்பல காட்சிகள் உண்மையில் பாம்புகள்தான் படங்கள் எடுக்கின்ற படாதிபதிகள்.... பிடாரன் கையில் பிரியமாய் வைத்திருக்கும் வட்டப் பெட்டியைப் பாருங்கள்; பக்குவமாய் படச்சுருளை வைத்திருக்கும் டப்பாவைப் பாருங்கள் எத்தனை ஒற்றுமை! அந்தஸ்தில் உள்ளவர் அங்கவஸ்திரம் அணிவர்; கல்லூரிக் காளையர் கோடையும் வசந்தமும் O 51