பின்னுரை பிரும்மாக்கள் 'மீரா தீட்டிய வசன கவிதை ஒவியம், இளைஞர்கள் பலரைக் காதல் கவிதைகள் எழுத வைத்து மீராவின் அலையை உருவாக்கியது.' 'கனவுகள் கற்பனைகள்-காகிதங்கள் என்ற கவிதை நூல் மூலம் தமிழ்க் கவிதை உலகில் பரவலாய் அறியப்பட்டவர் மீரா. தமிழ்ப் புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் குறிப்பிடத் தக்க ஒருவர். மருதுபாண்டியர் கோலோச்சிய சிவகங்கை சீமையில் கவிதை ஆட்சி செய்தவர் மீரா. புதிய கவிதை இலக்கியத்தின் அரை நூற்றாண்டு சரித்திரம் மீரா என்பதற்குப் பொருத்தமானவர். மீரா பிறந்தது சிவகங்கை. படித்தது ராமநாதபுரம். கல்லூரி வாழ்க்கை சிவகங்கையிலும், மதுரையிலும். 1938-ல் பிறந்த மீரா, தாம் பயின்ற சிவகங்கைக் கல்லூரியிலேயே பேராசிரியராக, முதல்வராகப் பொறுப்பு வகித்தவர். இயற்பெயர் மீ.இராசேந்திரன். கல்லூரிப் பருவத்தில்ேயே பகுத்தறிவுச் சிந்தனைகளிலும், திராவிட இயக்கக் கருத்துக்களிலும் அதிக ஈடுபாடு கொண்டதால், அந்த இயக்கம் சார்ந்த கவிதைகளைத்தான் ஆரம்பத்தில் எழுதி இருக்கிறார். இந்தி எதிர்ப்புக் கவிதைகள் கூட தீட்டியிருக்கிறார். இவை பெரும்பாலும் மரபுக்கவிதைகளாகவே இருக்கும். 1962-ல் தமிழண்ணல், அப்துல் ரகுமான், மீரா போன்றோரின் கவியரங்கக் கவிதைகள் பலவற்றைத் தொகுத்து சுவை' 300
பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/201
Appearance