பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்/63 வீடுவந்து சேரும்போது இரவு மணி பத்திருக்கும். பாவேந்தர் படுக்கையில் சாய்ந்து கொண்டார். நான் எதி சில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு சுவடியை விரித்து வைத்தேன். “என்ன எழுதப் போறியா?" என்று கேட்டார். "ஆமாம்! இன்று உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய மான ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச்சொல்ல வேண்டும். கி.பி. 1946 ஆம் ஆண்டில் உங்களுக்கு நடைபெற்ற நிதியளிப்பு விழா பற்றிக் கூறவேண்டும்” என்று கேட்டேன். அவ ரும் கூறத்தொடங்கிளுள்: "என்ளுேட நிதியளிப்பு விழாவில் மகிழ்ச்சி தரச்கூடிய செய்திகளும் உண்டு; வேதனை தரக்கூடிய செய்திகளும் உண்டு. எனக்கு நிதியளிக்க அல்லும் பகலும் ஓய்வு ஒழிச் சல் இன்றி ஒரு சல்லிக்காசுப் பயனையும் எதிர்பாராமல் உழைத்தவர் சிலருண்டு; எதிர்த்தவர் பலருண்டு. பொரு மையால் புழுங்கியவர்களும் உண்டு. இவ்வாறு புழுங்கிய தமிழறிஞர்களுள் சாமி. சிதம்பரம் ஒருவர். சாமி.சிதம்பரம் சுயமரியாதை, இயக்கக் காலத்தில் பெரியாருக்கும் அண்ணுவுக்கும் தமிழ் புகட்டிய அறிஞர். என்னுடைய 'எதிர்பாராத முத்தம் காவியத்தை முதன் முதலில் வெளியிட்டவர் காஞ்சிபுரம் திரு. பொன்னப்பன் அவர்கள். அந்த நூல் அ ச்சாகிக் கொண்டிருந்தபோது, பொன்னப்பன் அதற்கு ஆங்கிலத்தில் ஒரு முன்னுரை தரும்படி அண்ணுத்துரையைக் கேட்டார்; அண்ணுத்துரை கொடுக்க மறுத்துவிட்டார். சாமி. சிதம்பரம் தமிழில் அதற்கு ஒரு முன்னுரை வழங்கினர். அதில் என்னை மட் டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தார்.

வரலாற்றுச் சிறப்புள்ள இந்த கிதியளிப்புவிழா அழைப்பிதழ்

1-10-697 சுரதா இதழில் வெளிவந்துள்ளது. பிற்சேர்க்கையில் காண்க,