பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த நெல்லை

88


சார்ந்த சிவப்பிரகாசர் என்பார் நெல்லை போந்து இவர்பால் தமிழ் பயின்றனர். வெள்ளியம்பலவாணர் ஞானபரண விளக்கம் முதலிய சமய நூல்களை இயற்றியவர். கம்பரைப்போன்றும் சேக்கிழாரைப் போன்றும் வாக்குநலம் வாய்க்கப்பெற்றவர். அவர்கள் பாடியன போன்றே வேற்றுமை காணவியலாத நிலையில் பல பாடல்களைப் பாடி இடைச்செருகலாகப் புகுத்தும் புலமைநலம் படைத்தவர்.

இம் முனிவர்பால் தமிழ் இலக்கணத்தைப் பயின்று தேர்ந்த சிவப்பிரகாசர் நன்னெறி, திரு வெங்கைக்கோவை, திருவெங்கைக் கலம்பகம், திரு வெங்கையுலா, திருவெங்கையலங்காரம், சோணசைல மாலை, பிரபுலிங்கலீலை, திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.

குமரகுருபரர் சமயப்பணி

இவர்கள் காலத்தில் நெல்ல நாட்டில் விளங்கிய மற்றாெரு பெருங்கவிஞர் குமரகுருபரர். இவர் முருகன் அருள்பெற்ற தெய்வக் கவிஞராவர்; ஐந்து வயதிலேயே கந்தர் கலிவெண்பா என்னும் செந்தமிழ்ச் சிறுநூலை ஆக்கியருளிய அருளாளர். இவர் காலத்தில் நெல்ல காட்டில் கிறித்துவ சமயம் காட்டுத் தீப்போல் பரவியது. இத்தாலிய காட்டிலிருந்து தமிழ்நாட்டில் வந்து புகுந்த வீரமாமுனிவர் என்னும் கிறித்துவப் பாதிரியார் தமிழ்நாட்டு முனிவரரைப் போன்று கோலத்தாலும் சீலத்தாலும் சிறந்து விளங்கிச் சம்யப் பணியாற்றினர். அவர் வீரமுடன் ஆற்றிய கிறித்துவ சமயவுரைகளில் மக்கள் பெரிதும் ஈடுபட்டுச் சமயம் மாறி வந்தனர்.