குடிமையும் கயமையும் 7 : ருேளினும் மேலானவர் என்றும் புகழ்வதுபோல் இகழ்த் துரைத்தார் பொய்யில் புலவர். பின்னர்க் கூறும் காரணத்தால் அன்னவரின் இழிதகவை ஆய்ந்துணரு மாறு செய்தார். 'மக்கனே போல்ஷர் கயவர் அவரன்ன ஒப்பாரி பாம்கண்ட தில்', 'நன்றறி வாரிற் கயவர் திருவுடையச் நெஞ்சத் தவல சிலர்', "தேவ ரனேயர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்' என்ற மூன்று பாக்களாலும் கயவரது குற்றமிகுதியைக் கட்டுரைத்தார் திருவள்ளுவர். இவற்றில் வஞ்சப் புகழ்ச்சி என்னும் அணி அமையுமாறு செஞ்சொற்களை அமைத்த திறம் சிந்தைக்கினிப்பதாகும். அடக்குவாரின்றி ஊரில் திரியும் மாட்டைப் பட்டி மாடு என்று பழித்துரைப்பர். அங்கனமே அடக்க மின்றித் திரியும் கயவரும் பட்டிமாக்கள் ஆவர். அவர்கள் தாம் விரும்பியவாறே பிறர்க்குத் துன்பம் வினேத்துத் திரிவர். அத்தகைய கீழோர், தம் மினும் குறைவாகப் பிறர்க்குத் தீங்கு விளைக்கும் பெற்றியரைக் காணின் அவரின் மேம்பட்ட தம் தகுதியை எண்ணி இறுமாப்பர். இவர்களிடத்து நல்லொழுக்கத்தை எள்ளளவும் காண வியலாது. ஒருகால் இவர்கள் ஒழுக்கமுடையாரைப்போல் காணப்படுவராயின் அரசு ஒறுக்கும் என்ற அச்சம் அதற் கொரு காரணமாகலாம். அன்றி, அவர்கள் விரும்பும் பொருள் அங்ங்ணம் நடிப்பதால் கிடைப்பதாயிருக்கலாம். இவை காரணமாக அன்றிக் கயவர்.பால் ஒழுக்கத்தைக் காணலசிது என்பார் திருவள்ளுவர். "பூரியோர்க்கு
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/77
Appearance