70 ள்ைளுணர் சொல்லமுதல் றேனும் இலராகிய கீழோரது தன்மையே கயமை, எனப்படும். கயவரது இயல்பை விளக்க வந்த வள்ளுவர் மிகவும் வேடிக்கையாகவே பேசுகிருச். கயவர் வடிவத் தால் முழுதும் மக்களைப் போல்வர். அவர்கள் பிற மக்களே ஒத்திருப்பது போன்ற ஒப்புமையை வேறு இரண்டு சாதிக்கண் காணவே முடியாது. அங்ஙனம் கயவரும் மேலோரும் வடிவால் மிகவும் ஒப்புமையுடைய சாவர். இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய உறுதிப் பொருள்களே உணர்ந்து அவற்றை அடைய விழையும் மேலோர் அவற்றிற்குரிய அறநெறிகளை முயன்று ஆற்றுவர். அவற்றைச் செய்துகொண்டே மிகுதியாகச் செய்ய முடியவில்லையே என்று சிந்தை நோவர். அவற். றிற்கு ஏதேனும் இடையூறு நேருமோ என்றும் பழிபாவம் விளையுமோ என்றும் உளம் வருந்துவர். கயவர்க்கோ அத் தகைய கவலையேதும் இல்லை. அவர்கள் பழிபாவங்களை எத்துணை மிகுதியாகச் செய்தாலும் எட்டுனையும் கவலை கொள்ளார். ஆதலின் உறுதிப் பொருள்களைப் பற்றி அறியாத கயவர்கள் எப்பொழுதும் களிப்புடன் இருப்பர். மேலும் இக் கயவர், தேவர்க்கு ஒப்பாவர். தேவர் தாம் பெற்ற தலைமையால் ஏவுவார் இல்லாத பெருமையுடையவர். ஆதலின் தாம் விரும்பும் நல்லன. வற்றைத் தக்காங்கு செய்து மகிழ்வர். கயவரோ பிறர் சொல் கேளாத பேதையர். தாமும் தக்கன அறியாத தாழ்வினர். ஆதலின் இதனைச் செய்க என்று அவரை ஏவுவாரும் எவருமிலர். ஆகவே தேவரனையர் கயவர்' என்பது பொருந்துமன்ருே ! இங்கனம் கயவர், மக்களையும் தேவரையும் ஒப்பச் என்றும், உறுதிப் பொருளை உணர்ந்து செய்யும் சான்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/76
Appearance