மடியும் மறதியும் 77. 6 மடிசே குமவர்க் கொரு.நா ளுமறல் விடியா தவர்நெஞ் சிடைவெந் துயரே குடியா குமறந் தொடர்குற் றமெலாம் நெடிதா கவளர்ந் திடுநிச் சயமே." இத்தகைய கொடுமைவாய்ந்த மடிமையால் துயிலும் மறதியும் காலத்தாழ்வும் ஒருவனேக் தொடர்ந்து பற்றித் தொல்லேயுள் தள்ளுவனவாம். மடியுடையான் உண்டுண்டு உறங்குவதே இன்பமெனக் கொண்டு உழல்வான். அத்தகையானுக்குச் சொல்லு வன எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கொலிக்கு ஒப்பாகும் ; எவையேனும் மனத்தில் ஏறினலும் அந்தக் கணத்திலேயே அவற்றையும் மறந்துவிடு வான். இம் மறதியினைத் திருவள்ளுவர் பொச்சாப்பு என்று குறிப்பிடுவார். அதனைப் பொச்சாவாமை என்னும் அதிகாரத்தால் கண்டித்துரைப்பார். இப் பொச்சாப்பு, அரசர்க்கு உளதாயின் விளையும் பொல் லாங்கு பெரிதாகும் என்பார் அப் பொய்யில் புலவர். அரசர்க்கு மறதியால் விளையும் கேடு, மக்களையும் சூழ்ந்து வருத்துமாதலின் அதனே அரசியலில் வைத் துத் தக்கவாறு விளக்குகிறர். - மறதியின் தோற்றத்திற்குக் காரணம் கூறவந்த வள்ளுவர் அளவிறந்த உவகையும் மறதியை விளக் கும் என்ருர் உருவாலும் திருவாலும் வலியாலும் பெருமையுற்ற மன்னர் தற்காத்தல், பகையழித்தல் முதலிய செயல்களில் சோர்வுற்று மறந்திருப்பர். அத்தகைய மறதியால் விளையும் கேட்டிற்கு எல்லே, அளவிறந்த சினத்தால் விளையும் தீங்கினும் பொல்லா தாகும் என்ருர் வள்ளுவர். சினமோ சேர்ந்தாரைக் கொல்லும் தீமையுடையது. அளவிறந்த சினம்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/85
Appearance