உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயில்....கதையைமொழிதல்

39

சந்திசெபம் செய்யுஞ் சமயமாய்விட்ட(து) தென்றே 210
காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர்; காதலரே!
மாற்றி உரைக்கவில்லை. மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயா! திருவுளத்தில்
எப்படிநீர் கொள்வீரோ? யானறியேன், ஆரியரே!
காத லருள்புரிவீர், காதலில்லை யென்றிடிலோ 215
சாதல் அருளித் தமது கையால் கொன்றிடுவீர்!”
என்று குயிலும் எனதுகையில் வீழ்ந்ததுகாண்;
கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ? பெண்ணென்றால்
பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி
மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ? 220
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ ?
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ?
அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவதும் இன்பவெறி
கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை; 225
விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின்
தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டு தான்
கண்ணெடுக்காதென்னைக் கணப்பொழுது நோக்கினாள்; ... 230
சற்றே தலைகுனிந்தாள், சாமீ! இவள் அழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீன விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம் 235
பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான்
என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை
நின்றதொருமின் கொடிபோல் நேர்ந்தமனிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும், வெட்டினையுங், கட்டினையும்
தேனி லினியாள் திருத்த நிலையினையும். 240
மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர்வார்த்தை