இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நன்றியும் நடுவும் 43. துக்கு விளக்கம் கொடுப்பதுபோலவே உருத்திரங் கண்ணனரின் உரை அமைந்துள்ளதைக் காணலாம். நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினுேம் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வது உம் மிகைகொளாது கொடுப்பது உம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும்.” பண்பினராய்ப் புகார் நகரத்து வணிகர் தகவுற்று விளங்கினர் என்று விரித்துரைத்தார் அப்புலவர்.