டு. ஊழும் தாளும் ஊழ் என்பது மிகவும் உயர்ந்த ஒரு தமிழ்ச் சொல். அது பிறமொழிச் சொல்லன்று என்பதற்கு அதன்கண் உள்ள சிறப்பு ழகரமே தக்கசான்று. இச்சொல் மலர்தல், உதிர்தல் என்னும் இரு பொருளைத் தருவதாகும். இணர் ஊழ்த்தும் காரு மலர்' என்று வள்ளுவரே அச்சொல்லை மலர்தல் என்னும் பொருளில் எடுத்தாள்கின்ருர் கொப்பூழ் என்னும் சொல்லைக் கூர்ந்து நோக்கினல் கொம் பிருந்து உதிர்க்க இடமே அப்பெயர் பெற்றது என் பதை உணரலாம். கருப்பத்துள் இருக்கும் குழந் தைக்கு உணவுகொள்ள உதவும் குழல் போன்ற தொரு கருவியே அக்கொம்பு. எனவே, பருவ காலத் தில் மலரும் மலரைப்போன்று பயன் தரும் காலத்தில் உரிய பயனே ஊட்டிப் பின்னர் உதிரும் இயல்புடை யது அவ் ஊழ் என்று கொள்ளலாம். இக்கருத்தை, மாமலர் தாற்றம் போல்மணி மேகலைக்(கு) ஏது நிகழ்ச்சி எதிர்த்துளது.” என்னும் சீத்தலைச்சாத்தனரின் சிரிய வாக்கும் நன்கு வலியுறுத்தும். இவ் ஊழை, வினே, விதி, பால், வரை, முறை, தெய்வம் என்று பலவாறு புலவர் குறிப்பர். செம்பிற் களிம்புபோல உயிரைவிட்டு அகலாத ஆணவ இருள் ஒன்றுண்டு. அதுவே வினைகளைச் செய்யுமாறு தாண்டிச் செலுத்துகிறது. அவ் ஆணவ முனைப்பால் மனிதன் நல்வினையோ தீவினையோ செய்து கொண்டே இருக்கிறன் பேகையாயினன் ஒரு
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/68
Appearance