ஊழும் தள்ளும் 61: பிறப்பிலேயே எழு பிறப்பிலும் துன்புறுதற்குக் காரணமான தீவினைகளைச் செய்துகொள்வான் என்று செப்பினர் நம் ஒப்பில் புலவர் : ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அனறு." என்பது அவர் சொல்லமுதமன்றே! இன்பம் துய்த்தற்குக் காரணமான ஊழை ஆகூழ் என்றும், துன்புறுதற்குக் காரணமான ஊழைப் போகடழ் என்றும் குறித்தார் பொய்யில் புலவர். அவை முறையே நல்வினை தீவினையென்றும் சொல்லப்பெறுவதுண்டு. அறத்தைப் புரிதற்கும் பொருளே பீட்டுதற்கும் இன்பத்தைப் பெறுதற்கும் முதற்காரணமாவது ஊழே என்பதை வலியுறுத்த அறத்துப்பாலின் இறுதியில் அவ் ஊழியலே வகுத் தருளினர் வள்ளுவர். ஒருவனுக்கு ஆக-ழ் உளதாயின் அவனே அறியா மலே அவன்பால் ஊக்கமும் முயற்சியும் உயர்ந்தெழும்; போகழ் பொருந்திவிடுமாயின் அவன் எத்துணை முயன்ருலும் அழிதற்குக் காரணமாகிய சோம்பலே பெருகிக்கொண்டிருக்கும். ஒருவன் பேரறிவைப் பெற்றிருந்தாலும் அவன் ன்கப்பொருளே இழத்தற் குக் காரணமாகிய போகூழ் வந்து சூழ்ந்துகொண்டால் அவனைப் பேதையனுக்கிவிடும். சிற்றறிவுடையான் ஒருவனுக்கு ஆகூழ் வந்து சூழ்ந்தாலோ அவன் அறிவு தானகவே விரிவெய்தி விளக்கம்பெறும் என்ருர் திருவள்ளுவர். - பேதைப் படுக்கும் இழஆழ் அறிவகற்றும் ஆகலு ழ் உற்றக் கடை." என்பது அவர் சொல்லமுதமாகும்.
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/69
Appearance