62 வள்ளுவர் சொல்லமுதம் பேதைமை விளேக்கும் தீவினையுடையான் துண் பொருள் கூறும் பெருநூல்கள் பலவற்றைக் கற்ரு லும் அவை அவனுக்குப் பயன்தரமாட்டா. அவ லுக்குப் பின்னும் அப்பேதைமை அறிவே பெருகி நிற்கும். ஆதலின் நல்லறிவைப் பெறுதற்கும் கல் வினேவேண்டும். பெருஞ் செல்வத்தைப் பெறுதற்கும் பிறிதொருவகையான ஆகூழ்வேண்டும்.அறிவுடையா ராதற்குக் காரணமாகும் ஊழ், செல்வராதற்குக் காரணமாகாது. செல்வராகற்குக் காரணமாகும் ஊழ், அறிஞராகற்குத் துணசெய்யாது. இதனேயே வளளுவா, இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு." என்று கூறியருளினர். ஒருவன்பால் செல்வம் பெருகுதற்குக் காரண மான ஊழ் உளதாயின் அச் செல்வத்தை ஆக்கு வதற்கு நல்லவையெல்லாம் தீயவாகவும் தீயவை யெல்லாம் நல்லனவாகவும் மாறிப் பயன்தரும். ஒருவன் செல்வத்தை எவ்வளவுதான் சேமித்துக் காத்தாலும் அது கிற்றற்குரிய ஊழ் அற்றுப்போமாயின் அச் செல்வமும் நில்லாது அகன்றுவிடும். அவனுக்கு மேன்மேலும் செல்வம் வளர்தற்குக் காரணமான ஊழ் வலிபெற்று நிற்குமாயின் அச் செல்வத்தைப் புறத்தே கொண்டு வெறுத்துச் சொரிந்தாலும் அகலாது நிறைந்துகொண்டே இருக்கும். பரிவினும் ஆகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம." என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும்.
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/70
Appearance