உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழும் தாளும் 63 ஐம்புல இன்பங்களையும் அனுபவித்தற்கு வேண்டும் பொருள்கள், ஒருவனிடம் அளவிலாது அமைந்திருக்கலாம். அவன் கோடிக்கணக்கான செல்வத்தை மலைபோல் குவித்திருக்கலாம். அவற்றை, அவன் துகர்ந்து மகிழவேண்டுமென்முலும் கல்லூழ் வேண்டும் என்று நவின்ருர் திருவள்ளுவர். வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது.” என்பது அவர் சொல்லமுதமன்றே ! சில சமயத்தவர்கள் ஊழ்வினை ஒருவனேக் தானே வந்து பற்றி அதன் பயனைத் தருகிறது என்பர். பல்வேறு பசுக்கள் கிறைந்த பெருங் கூட்டத்தில் இளங்கன்று ஒன்றைச் செலுத்தினுல் அது தன்னுடைய தாய்ப் பசுவைத் தானே காடி அடைந்துவிடும். அஃதேபோல் ஒருவன் செய்த வினே செலுத்துவானின்றித் தானே செய்தவனே மறுமையில் சென்று சேர்கின்றது என்பார் ஒரு சமணமுனிவர். - பல்லாவுன் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லேப் பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த கிழவனே நாடிக் கொள ற்கு." என்பது அவரது காலடிப் பாடல். இக்கருத்து வள்ளுவர்க்கு உடன்பாடன்று என்பதை வகுத்தான் வகுத்த வகை என்ற அவர் வாக்கால் அறிய லாம். வினைப்பயனை அனுபவிக்குமாறு செய்பவன் இறைவன்; அவன் வினைசெய்தானேக் காட்டி ஊட்டாவிடின் அவ்வினையினுக்கு உரியவனே நாடி புறுதல் இயலாது என்பது வள்ளுவர் உள்ளமாகும்.