பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

ஜூரர்களுக்குச் சிறு தொகை, அவர்கள் வந்து போவதற்குரிய செலவின் பொருட்டுத் தரப்பட்டது.

அக்காலத்தில் ஏதென்ஸ் நகரத்தில் ஜூரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை வெகு விந்தையானது. வழக்கு நடக்கும்போது மக்கள் கூடி வேடிக்கை பார்த்தல் இன்றும் அன்றுமுள்ள பழக்கமாகும். அப்படிக் கூடி வேடிக்கை பார்ப்பவர்களுள் சிலரையே திடுமென ஜூரிகளாக அமர்த்தி தம் கருத்தைக் கூறுமாறு ஏற்பாடு செய்வர். இதனால் வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு யார் ஜூரர்களாக வருவர் என்பதை முன்னதாக அறிந்து கொள்வதற்கு வழிபோகிறது. முன்னதாக இன்னார் தாம் ஜூரர்களாக வருவர் என்பதை அறிந்தால் தீர்ப்பு நீதி முறையில் கூறப்பட்டதாகக் கருத முடியாது. ஏனென்றால் ஜூரர்களை அறிந்து, அவர்களுக்குக் கைக்கூலி ஈந்து, தீர்ப்பைத் தம்பக்கம் நல்லமுறையில் தீர்த்துக்கொள்வர் என்பதை ஒழிக்கவே, இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகும். இது நல்ல ஏற்பாடே. இந்த நீதி முறை பாராட்டுதற்குரியதே. ஜூரர்களாக வருவதற்கு எவரும் விரும்பினர். இவ்விருப்பம் தமக்குக் கொடுக்கப்படும் சிறு தொகைக்காக அன்று. இருதிறத்தார் வாக்கு மூலங்களைக் கேட்டு இன்புறுவதற்காகவே ஆகும். நீதி மன்றம் ஓர் அழகிய கட்டடத்தில் அமைந்த தன்று. வழக்குகள் ஒரு வெட்ட வெளியில் நடத்தப்படும். ஜூரர்கள் அமர்வதற்கு விசிப்பலகைகள் இடப்பட்டிருக்கும். மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஏறித்தான் பேசுபவர் பேசவேண்டும். இந்த