பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛歌 - திருக்குறள் வசனம்

இவர் அன்புடையார் அன்பில்லார்’ என்பதை எங்க இனம் அறிவது என்று சிலர் ஐயுறலாம். இதனே அறிதல் மிக எளிது. அன்பினை அடைத்துவைக்க இயலாது. அதனை அடைக்கற்குரிய தாழ்ப்பாளும் இல்லை. இஃது எப்படியும் வெளிப்பட்டு விடும். தம்மால் அன்பு செய்யப்பட்டவர்து துன்பம் கண்ட அன்புடையார் கண் தன்னை அறியாமல் கண்ணீரைச் சிந்தி தமக்கு இருக்கும் அன்புடைமையை எல்லாரும் அறிய வெளிப்படுத்தி கிற்கும். இதனுல் இவர் அன்புடையார் என்பதை நன்கு அறியலாம். அன்புடைய வர் எதையும் தமக்குத் தமக்கு என்று வைத்துக்கொள்ள மாட்டார். சமயம் வந்தபோது தம் உடம்பையே தியாகம் செய்து தம் அன்புடைமையை நிலை நிறுத்துவர்.இவர்கட்கு சான்ருகப் பலரைக் காட்டலாமாயி உம், புருவின் பொருட்டுத் தாாசுத் தட்டில் ஏறித் தன்னையே ஈந்த சிபிச் சக்கரவர்த்தியையும், விருத்திசா சூசனக் கொல்ல இக்கிா இறுக்குத் தம் முதுகு எலும்பை சந்த கதீசி முனிவரையும் எடுத்து இயம்பலாம்.இவர்கள் தம்மையே ஈந்த கணிப்பெரும் பண்பாளர். இவ்வன்புடைமையைப்பெருதவர் எதையும் தம தாகவே கொண்டு பிறர்க்கு ஈயாக லோபிகளாக இலங்குவர்.

அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பய ஆகவே மக்கள் உயிர்க்கு உடம்போடு கூடிய தொடர்ச்சி யினக் கருதவேண்டும். அன்பு காட்டுதற்கே உடம்பு உயிர் ஆகிய இரண்டும் தொடர்ந்து மக்கட் பிறவியை எடுத்தது என்பதை உணர்தல் வேண்டும். இங்கனம் காட்டப்படும் அன்பு, கன்னத் தொடர்ந்தார்மாட்டு, மட்டும் கின்று விடாமல் பிறர் மாட்டும் விருப்பமுடையவராகலைத் தரும் அவ்விருப்பம் பகை தவிர்த்த நட்புடைமை என்று கூறப்

படும். அளவிறந்த சிறப்புடைமையையும் காவல்லதாகும்.