பக்கம்:கடற்கரையினிலே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கடற்கரையிலே
1. திருவள்ளுவர்


டற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள் கண்ணுக் கடங்காத கடல் ஒரு காட்சி எண்ணுக் கடங்கா, மணல் ஒரு காட்சி. அம்மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர், கண்ணீர் வடிப்பவர் இன்னோர் தரும் காட்சிகள் எத்தனை ! சென்னை மாநகரின் சிறந்த நலங்களில் ஒன்று அதன் கடற்கரை யன்றோ?

அங்குள்ள திருமயிலைக் கடற்கரையில் வேனிற் கால மாலைப் பொழுதிலே வந்து நின்றார் ஒரு மேதை. சீலமே உருவாய அப்பெரியார் சிறிது கடலைக் கூர்ந்து நோக்கினார். அப்போது அடிவானத்திலே எழுந்தது ஒரு கார்மேகம், இடி இடித்தது; இருள் பரந்தது. பெருமழை பெய்யும் போலிருந்தது. அம்மழைக் குறியைக் கண்டும் கடற்கரையை விட்டுப் பெயர்ந்தார் அல்லர் அப்பெரியார்; கடலின்மேல் மண்டிய மேகத்தை நோக்கிப் பேசலுற்றார் :

“என்னே இம்மேகத்தின் கருணை சென்னை மாநகரில் அனல் வீசுகின்றது; கேணிகளில் குடிதண்ணீர் குறைகிறது; உயிர்கள் உலர்ந்து திரிகின்றன. இவற்றை யெல்லாம் அறிந்தும் இக்கடல், அளவிறந்த தண்ணீரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/7&oldid=1247493" இலிருந்து மீள்விக்கப்பட்டது