உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர்களுக்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மாணவர்களுக்கு


கொடுக்கப்படுகிறது. நம் நாட்டிலும் விஞ்ஞானத்தைத் தாய்மொழியில் கற்றுக் கொடுத்திருந்தால் நம் பிள்ளைகளும் நிலவுக்குப் போயிருக்க முடியும். இதில் நம் நாட்டு அரசியல் வாதிகளும், அரசாங்கமும், கல்வித்துறை அறிஞர்களும் கருத்தைச் செலுத்தவில்லை.

ஒரு காலத்தில் ஆங்கில மொழியின் மூலந்தான் விஞ்ஞானத்தை அறியமுடியும் என்றிருந்தது. அந்த முடிவை ஜப்பானியமொழி விஞ்ஞானமும், ஜெர்மன் மொழி விஞ்ஞானமும், இரஷ்ய மொழி விஞ்ஞானமும் தவிடு பொடியாக்கி விட்டன. இதையறிந்த பிறகாவது தமிழ்ப்பிள்ளைகளுக்கு தமிழ் நாட்டில் பயிற்று மொழி தமிழ் மொழியாகச் செய்திருக்க வேண்டும். இல்லையானால், ஒரு காலத்தில் வந்தே தீரும். மாணவர்களாகிய நீங்கள் கல்வித் துறையில் பயிற்று மொழி தமிழாக வருவதை விரைவில் விரும்பி வரவேற்பது நல்லது.

கீ. உயிரெழுத்துக்களின் ஒலி

எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் நம் தாய்மொழியாகிய தமிழுக்கு மட்டுமே உள்ளன. அவற்றில் ஒன்று அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்து உயிரெழுத்துக்களும் உதடுகளால் மட்டுமே ஒலிக்கக் கூடியதாக அமைந்திருப்பது. இதை ஒலிக்க தொண்டை, நாக்கு, பற்கள் முதலிய எதன் உதவியும் தேவையில்லை. இரண்டு உதடுகளைத் திறக்கும் போதே ‘அ’, அவ்வுதடுகளைச் சுருக்கும் போதே 'உ’, அதை அப்படியே உயர்த்தும் போதே 'ஒ,'கீழ் உதடை இறக்கும் போதே 'எ', இரண்டு உதடுகளையும் அகற்றி இழிக்கும் போது 'இ' என்ற ஒலிகள் உண்டாகி விடுகின்றன. இந்த இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/57&oldid=1434823" இலிருந்து மீள்விக்கப்பட்டது