பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கோகோ ஆட்டம்


6. திசைகொள்ளல் (To take a Direction)

ஓடி விரட்டபவர், ஒரு கம்பத்தின் பக்கத்திலிருந்து மறு கம்பம் வரையில் நேராகச் செல்வதைத்தான், திசை கொள்ளல் என்று கூறுகின்றார்கள். அதாவது, ஒருவர் முகத்தை எந்தப் பக்கமும் திருப்பாது. நேராக நோக்கியபடி போவதையே ஒரு திசை நோக்கிச் செல்கின்றார் என்பதைக் குறிக்கவே, திசை கொள்ளல் என்பதாகக் குறிக்கிறோம்.

7. முகத்தைத் திருப்புதல் (To Turn the Face)

ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஓடி விரட்டுபவர், அவரது (He or She) தோள் அளவு நிலையை நேர் கோண அளவுக்கு (Right Angle) மேலாகத் திருப்பிவிட்டால், அவர் முகத்தைத் திருப்பியதாகக் குற்றஞ் சாட்டப்படுவார்.

முகத்தைத் திருப்புதல் என்பத தவறாகும்.

(தோள் அளவு நேர்க் கோணம் என்பது ஒருவர் நிற்கும் போது அவரது தோள் அளவிலிருந்து நீண்டு நேராகப் போகும் கற்பனைக் கோட்டின் மூலமாகக் கண்டு கொள்க.)

8. பின்வாங்குதல் (To Recede)

ஒரு குறிப்பிட்ட திசையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஓடி விரட்டுபவர், ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கடந்து விட்ட பிறகு நேர்த் திசையிலே ஓடாமல், உடனே திரும்பி, எதிர்த் திசைப் புறமாக ஓடினால் அவர் பின்வாங்கினார் என்று கருதப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/30&oldid=1377539" இலிருந்து மீள்விக்கப்பட்டது