உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கால் பந்தாட்டம்


ஆடப்படும் பந்து எங்கே? என்ற சூழ்நிலையை மிகக் கவனமாக ஆராய வேண்டும்.

ஒரு தாக்கும் குழு ஆட்டக்காரர், தடுக்கும் குழுவினர் பகுதிக்குள்ளே, தன் குழுவினர் பந்தை வைத்து ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில், பந்துக்கு முன்பாக, எதிர்க்குழு இலக்குக்கு அருகில் நின்று கொண்டிருந்தால், அவரை அயலிடம் என்று உடனே முடிவெடுத்து விடுகிறோம். அவர் பந்துக்கு முன்னதாக நிற்பதால் மட்டுமே அவ்வாறு கூறிவிட முடியாது.

அயலிடப் பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தாலும், அவர் ஆட்டத்திலே கலந்து கொள்ளாமல் நின்று கொண்டிருந்தால் அல்லது கலந்து கொள்ள முயற்சிக்காமல் இருந்தால் அல்லது எதிராளியைத் தடுக்காமல் இருந்தால், அவர் அயலிடத்தில் நிற்கவில்லை என்பதைத் தெளிவாகக் கண்டு கொள்ளலாம். அவர் ஆட முயற்சி செய்தால், நிச்சயம் அவர் ‘அயலிடம்’தான் என்றே உறுதி செய்யலாம்.

ஆகவே, ஒரு ஆட்டக்காரர் ஆடும்போது, இவ்வாறுள்ள அயலிடத்தில் இருந்து தப்புவதற்கு, நான்கு வழிகள் உள்ளன.

1) தன்னுடைய சொந்த ஆடுகளப் பகுதியில் அவர் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். அவர் அயலிடம் ஆவதற்கு வாய்ப்பில்லை.

2) தான் நிற்குமிடத்திற்கும், எதிர்க்குழு இலக்கிற்கும் இடையே இரண்டு எதிராளிகள் நின்று கொண்டிருந்தால், அப்பொழுதும், அவர் அயலிடம் ஆவதற்கு வாய்ப்பேயில்லை.