பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

71


ஆடுவதில் தான் குழுக்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு வழங்குவதில் தவறு ஏற்பட்டு, பந்து அடுத்தவர் வசம் போய்விட்டால், பிறகு மிகவும் சிரமப்பட்டுத்தான் திரும்பவும் பெற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்குள்ளே வெற்றியை இழக்கும் வாய்ப்பு வந்தாலும் வந்துவிடுமே? யார் கண்டது?

எப்பொழுதும் ஆடுகளம் கிழக்கு மேற்காக அமைந்திருக்காமல், தெற்கு வடக்காகவே உருவாக்கப் பட்டிருக்கும். மாலை நேரங்களில் தான் போட்டியும் இருக்கும். காலை நேரத்தைவிட மாலையிலே, காற்று சற்று அதிகமாக வீசும். அப்பொழுது ஆடுகின்ற சமயத்தில் எப்படி ஆடுவது என்பதையும் நீங்கள் அறிந்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.

நீங்கள் காற்றின் வேகத்துடனேயே ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அது உங்கள் குழுவுக்கு சாதகமான சூழ்நிலைதான். அப்பொழுது ஆட வேண்டிய அமைப்பு முறையே வேறு. எப்பொழுதும், தங்கள் கால்களுடனே பந்து தொடர்பு கொண்டிருப்பது போல தட்டிக் கொண்டும், உருட்டிக் கொண்டும் முன்னேற வேண்டும்.

எதிர்க் குழுவினர் எதிர்த்து வந்தால், அவர்கள் தலைக்கு மேலாக பந்தைத் தட்டிவிட்டும், மறுபுறம் தனது பாங்கருக்கு வழங்கினாலும் வசதியாகவும் இருக்கும். பந்தும் நினைத்த இடத்திற்கும் போகும்.

மைய முன்னாட்டக்காரர் பந்தைத் தன் வலப்புற இடப்புற முன்னாட்டக்காரர்களுக்கு வழங்கும் பொழுது, எதிர்க்குழுவினர் நிற்கின்ற இடங்களிலே விழும்