உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கால் பந்தாட்டம்


காரர்கள் (Substitutes) என இருவர் உண்டு. நட்புப் போட்டிகளில் இருவரையே அனுமதிக்கலாம். வேறு போட்டிகளில் இரு குழுத் தலைவர்களும் இணைவுடன் சம்மதித்து ஏற்றுக் கொண்டால், 5 பேர்களுக்கு மிகாமல் மாற்றாட்டக்காரர்கள் இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம்.

2. ஆட்டம் தொடங்குவது எவ்வாறு?

ஆட்டம் தொடங்குவதற்கு முன், குழுத்தலைவர்கள் இருவரில் ஒருவர் நாணயத்தைச் சுண்டி எறிய, மற்றொருவர் பூவா தலையா, என்று கேட்க, அதில் வெற்றி பெற்றவர் ஆடுகளத்தின் ஒரு பகுதி அல்லது 'நிலை உதை’ எடுக்கும் வாய்ப்பு எனத் தமது விருப்பத்தைக் கூறித் தேர்ந்தெடுத்துக் கொள்வார். அதற்குப் பிறகு, இரு குழுவினரும், அவரவருக்குரிய இடங்களில் போய் நின்ற கொண்டு, ஆடத் தயாராக இருப்பர்.

ஆடுகளத்தின் நடுவிலே, குறிக்கப்பட்டிருக்கும் 10 கெஜ தூரம் உள்ள வட்டத்தின் மையத்திலே, பந்து வைக்கப்பட்டிருக்கும். முதலில் 'நிலை உதை' எடுக்கும் வாய்ப்பைப் பெற்றவர்களின் முன்னோட்டக்காரர்கள் வட்டத்தின் உள்ளே வரவும், மற்ற எதிர்க்குழுவினர் 10 கெஜ தூரத்திற்கு அப்பால் நிற்கவும், இதனை சரிவரப் பார்த்துத் தெரிந்து கொண்ட நடுவரின் இணக்கத்திற்கு அறிகுறியாக, விசில் ஒலி கிளம்பும். ஒலி சைகைக்குப் பிறகு, வட்டத்திற்குள்ளிருந்தவர்கள் பந்தை உதைத்துத் தள்ளி ஆட ஆட்டம் தொடங்கும். அவர்களில் இருவர், பந்தை ஒருவர் மாற்றி ஒருவர் ஒருமுறை ஆடத் தொடங்கிய உடனேயே ஆட்டம் முறையாகத் தொடங்கப் பெறுகிறது.