17
அதுவே இறுதிப்பெயராக இந்த ஆட்டத்திற்கு அமைந்துவிட்டது.
வேறு பல நாடுகளிலும், இதுபோன்ற விளையாட்டு என்னென்ன பெயர்களில் நிலவி, பரவி, விரவி வந்தது என்பதையும் இனி காண்போம்.
வட தென் அமெரிக்க சிவப்பிந்தியர்கள் இதுபோன்ற விளையாட்டை, கூட்டங் கூட்டமாகக் காலை முதல் மாலை வரை தொடர்ந்து ஆடினர் என்று சரித்திரக்குறிப்புக்கள் சாற்றுகின்றன.
அயர்லாந்தில் தேசிய விளையாட்டாக முக்கியத்துவம் பெற்றிருந்த கோல்-பந்து விளையாட்டுக்கு ‘ஹாக்கி’ (Curley) எனவும், ஸ்காட்லாந்தில் ஆடப்பெற்ற ஆட்டத்திற்கு ‘சிந்தி’ (Shinty) எனவும், வேல்ஸ் நாட்டில் ‘பந்தே’ (Banday) எனவும், ஹாலந்து காட்டில் ‘டச்சு ஹாக்கி’ எனவும் பலவாறு பெயர் பெற்றிருந்தன.
எவ்வளவோ நாடுகளில் எத்தனையோ வழிகளில் எப்படி எப்படியோ விதிமுறைகள் கொண்டு இந்த விளையாட்டு இடம் பெற்றிருந்தாலும், இதற்கென்று ஒரு இறுதி வடிவம் கொடுத்து, எழிலான அமைப்பினைத்தந்து ஏற்றம் நல்கிச்சிறப்பித்து, பாரெங்கும் பீடு நடை போடச்செய்த பெருமை இங்கிலாந்தையே சேரும்,
விதிகள் வளர்ந்த விதம்
கி.பி.1840ம் ஆண்டுக்கு முன்பும் பின்பும், இங்கிலாந்து முழுவதும் அப்பந்தாட்டம் பரவலாக மக்களால் பெரிதும் விரும்பி ஆடப்பட்டு வந்தது. நாடெங்கும் கிளைச்சங்கங்கள் அதிக அளவில் கிளைத்து எழுந்தன.
வளைகோல்-2