பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 63 சீதை என்று நாங்கள் செல்லமாக அழைத்த அந்தப் பெண் சிட்டுக்குருவி எங்கள் வீட்டுப் பெண். அப்பொழுது சீதை, அம்மாவை இழந்த அனுதைக் குழந்தை; செளந்தரம் அதன் வளர்ப்புத் தாயாளுள். கூடு கட்டிக்கொடுத்தாள். ஊசி வாய்க்கேற்ற மென்மையான ஆகாரத்தை ஊட்டினுள். ஆறே மாதங்களில் சீதை பருவத்துக்கு வந்துவிட் டாள். அவளுக்கு இப்பொழுது செளந்தரம் சோறு ஊட்ட வேண்டியதில்லை. சீதை எங்கோ பறந்து போவாள், திரும் புவாள். பருவக் குறும்புகள் செய்வாள். செளந்தரத்துக்குத் தன் வளர்ப்புப் பெண்ணின் வளர்ச்சிகளில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. திடீரென்று ஒரு நாள் சீதையுடன் ஒரு புதிய அழகன் வந்து சேர்ந்தான். இருவரும் கூடிக் கொம்மாளமிட்டார்கள். இணைபிரியாமல் திரிந்தார்கள்; பறந்தார்கள்; உண்டார்கள்; உறங்கினர்கள். சீதையின் காதலன்தான் அவன் என்பதை எனக்குப் புரிய வைத்தவள் செளந்தரமே ! எங்கள் வீட்டு மாப்பிள்ளேக்கு ராமன் என்று பெயரிட்டாள் அவள். சில மாதங்களில் சீதை கருவுற்ருள். அப்பொழுது அவளே ராமன் வெளியே கூட்டிச்செல்வதில்லை. அவனும் ரொம்பத் துரம் போவதில்லை. பக்கத்திலேயே இரை தேடி அலகில் இடுக்கிக் கொண்டு கூட்டுக்கு வருவான். மனைவிக்குக் கொடுப்பான். மீண்டும் பறப்பான். நாள் முழுவதும் அவ ணுக்கு இதே வேலேதான் ! ஒரு மாதத்துக்கு முன்பு நான் படுக்கை விட்டு எழுந்த போது, " உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கிருன் ” என்ற செய்தியைச் சொன்னுள் செளந்தரம்.

  • சீதை பிரசவித்து விட்டாளா ?” "ஆமாம்! பயல் ரொம்ப அழகாக இருக்கிருன் வந்து பாருங்களேன்!”

கூட்டை நோக்கி ஓடினேன். ஒரு ஸ்டுலப் போட்டுக் கொண்டு கூட்டினுள் எட்டிப் பார்த்தேன். சீதையின் இறகு விரிப்பில் என் பேரன் கண்வளர்ந்து கொண்டிருந்