14
நுனிபாகத்தில் வளைவான பகுதி தேவை என்று வளைந்த குச்சிகளாக எடுத்துக்கொண்டு விளையாட இன்பங் கண்டிருக்கின்றனர்.
இத்தகைய பழங்களும், கற்களும்தான் உருண்டை வடிவமாக, பந்து என்ற ஒன்று பிறப்பதற்குக் காரணமாக அமைந்தன. கற்களும் பழங்களும் கிடைக்காத பொழுதும், நன்றாக பயன்படாத பொழுதும் அவைகளைப் போலவே வெட்டிய மரக்கிளைகளில் இருந்து மரகட்டைகளை செதுக்கி உருண்டையான பொருளாக்கி பந்தாக ஆடினர்.
பரினம வளர்ச்சி போலவே, ஆட்டங்களில் கொண்ட ஆர்வத்தால் பெற்ற முயற்சிகளால், பந்தும் அவ்வப்பொழுது புதிது புதிதாகப் பிறப்பெடுத்தது. கட்டையாகப் பிறந்த பந்து இன்று கட்டாங் தரையில் துள்ளிக் குதித்து எழும்புகின்ற அளவுக்கு நுண்ணிய அளவில் முன்னேற்றம் பெற்று விளங்குகின்றதையும் நாம் பார்த்தும் ஆடியும் மகிழ்கின்றோம்.
கூழாங் கற்களைக் கையால் உருட்டியும் தள்ளியுடி விளையாடியதன் மறுவடிவமே ‘லான் பவுலிங்’ (Lawa Bowling). ‘கா்லிங்’ (Curling), வளைந்த குச்சியால் பந்தைத் தட்டி ஆடியதன் விளைவே மென் பந்தாட்டம் (Soft Ball),லாக்ரோசி (Lacrosse), குழிப் பந்தாட்டம் (Golf), கிரிக்கெட். வளைகோல் பந்தாட்டம் என்று உருமாறி, தரம் ஏறி, திறங் கூடி-கோல் பந்து விளையாட்டாகத் தோற்றம் பெற்றிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆதி காலத்தில் இப்படித்தான் இந்த ஆட்டம் வந்திருக்கும், வளர்ந்திருக்கும் என்று யூகத்தால் பேசிக்