18
மலருக்கு மது ஊட்டிய வண்டு
18 மலருக்கு மது ஊட்டிய வண்டு
கேன் ஐ கோ வித் அவுட் யு-தெரியுமா?’’
நல்லாத்தான் ஸெலக்ட் பண்ணி வெச்சிருக்கிங்கே முதல்லே, யு காண்ட் டேக் இட் ஃப்ரம் மீ’ங்கற பாட்டுப் பாடறேன். ரொம்பப் பிரமாதமாயிருக்கும்!”
ப்ரொவிட்."
அவன் ரிகார்டிங் பண்ணுவதில் முனைந்தான். சோபியாவின் நீலநிற விழிகள் மைக் கை மொய்த்துக் கொண்டிருந்தன. அவள் தன்னையே மறந்து இசையிலே ஒன்றிப் பாடிக் கொண்டிருந்தாள். அந்த அறை முழுவதும் அவள்குரலால் மணத்தது. எங்கோ ஒரு பெரிய வெஸ்டர்ன் கான்ஸர்ட் ஹாலின் நடுவே இருப்பது போலவே பாபு வுக்குப் பிரமை தட்டியது. அவனது விரல்களிலே
ட்ரம்பெட் டின் வேகம் துடித்துக் கொண்டிருந்தது.
பாட்டை முடித்துவிட்டு, அவள் தன் விழிகளை அவன் பக்கம் திருப்பியபோது பாபு தன்னையும் மீறி, மார்வ லெஸ்.மார் வலெஸ்” என்று கை தட்டினான், ஸ்விட்சை "ஆஃப்’ செய்வதையும் மறந்து. ஆனால்
சோபியா பிரமை பிடித்தாற்போல் தன்னையே வெறிக்கப் பார்த்துப் கொண்டிருக்கவும்: 'ஏன் சோபா இப்படிப் பார்க்கறே?' என்று கேட்டான் பாபு, ஒன்றும் புரியாமல்.
அவள் கூறினாள்: 'உங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.'"
என்னைப் பற்றியா?’ என்றான் பாபு ஆச்சரியத் துடன்.
ஆமாம்; இந்த மேற்கத்திய இசையிலே பட்டம் பெற்ற நானும் டேவிட்டும், உங்கள் கர்நாடக இசையா