பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

19

கே. பி. நீலமணி 19

கவரப்பட்டு இங்கு வந்து அதைக் கற்றுக் கொள்கிறோம். இங்கே இருக்கிற உங்களுக்கு எங்கள் இசை மீது மோகமா யிருக்கிறது! இவ்வளவுக்கும் நீங்கள் ஒரு மகா வித்துவா னுடைய பிள்ளை. நல்ல காண்ட்ரரி ய்யா இல்லே!'

சோபியாவினுடைய இந்தப் பேச்சு பாபுவிற்குப் பொறி தட்டினாற் போல் இருந்திருக்க வேண்டும். சற்று சூடாகவே அவனும் பதில் கூறினான்:

'என்னுடைய ஆசைகளையும் விருப்பத்தையும் - ஒரு சராசரி மனிதனுக்குரிய உரிமையோடுதான் நான் அனுப வித்து வருகிறேன். அதற்குத் தடையாக எந்த வர்ணமும் நான் பூசிக் கொள்ளவில்லை. என்னை ஒரு மகா வித்து வானுடைய மகன் என்று நீயோ, மற்றவர்களோ பெருமையாகக் கூறுவதை நான் ஆட்சேபிக்க முடியாது என்றாலும்; நான் என்னைப் பற்றி அப்படி ஒருபோதும் பெருமையாகக் எண்ணிக் கொண்டதில்லை. காரணம், இந்தக் கர்நாடக சங்கீதத்தின் மீது எனக்குப் பிரமிப்போ, பிடிப்போ இல்லாதபோது அதிலே அப்பா, மகா வித்து வானாக இருந்தால் என்ன? சாதா ன வித் வானாக இருந்தாலென்ன?”

'ஊரிலுள்ளவர்கள் எல்லாம் தன்னிடமுள்ள வித்தை யின் சிறப்பைக் கண்டு, தேடி வந்து கற்றுக்கொண்டு போய் சோபிக்கிற வேளையில்; தன் மகன் அப்படிப் பிரகாசிக்கவில்லையே என்றெண்ணுகிற ஒரு தந்தையின் ஏக்கத்தையாவது, முயன்றால் நீங்கள் போக்கியிருக்க முடியுமல்லவா?’’

  • ஒருவருடைய ஏக்கத்திற்காகவும், துக்கத்திற்காக வும் எல்லாம், ஒரு தொழிலை ஏற்றுக் கொள்ள முடியுமா? அவருடைய புகழ் பரப்ப உங்களைப் போல் அவருக்குப் பலர் இருக்கிறார்களே? போகட்டும், எனக்கென்னவோ பாப் மியூசிக்லே இருக்கிற பிரமையிலே பாதிகூட இந்தக் கர்நாடக இசையிலே ஏற்படலேயே?’’