உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா முன்போலவே உழைக்கும் ஆற்றலைப் பெற்று விடுகிறார்கள் பெண்கள். தசையின் அமைப்பிலும் சக்தியிலும் ஆண்களை விட பெண்கள் பாதியளவே பெற்றிருந்தாலும் அதிக விரைவிலே களைப்பு நீங்கியும், இறுதிவரை உழைக்கக் கூடிய நீடித்த சக்தியையும், எப்பொழுதும் பெற்றிருக் கின்றார்கள். அதிக வெப்பமான சூழ்நிலையையும், அதே நேரத்தில் மிகக் குளிர் மிகுந்த சூழ்நிலையையும் பெண் உடல் தாங்கிக் கொள்ளும் என்ற உண்மையை, எல்லா விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களுமே ஒத்துக் கொண்டவர்கள் தான். அதனால் தான், ரஷ்யா முதன் முதலாக விண்வெளிப் பயணத்திற்கு, ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. பயணமும் வெற்றிகரமாக நடந்தேறியது. மாதம் ஒரு முறை மாதவிலக்கு என்ற இயற்கை இரத்தப் போக்கின் காரணமாக, அதிகமான இரத்தத்தைப் பெண்கள் இழந்தாலும் கூட, அவர்கள் அதனால் களைத் துப் போவதில்லை. மிக விரைவிலேயே பழைய நிலைக்கு வந்து விடுகின்றனர். இவ்வாறு அடிக்கடி ஒய்வெடுக்கும் தன்மையிலும், ஆர அமர உழைப்பதினாலும் தான் பெண்கள் நீண்ட நாள் உயிர் வாழ்கின்றனர். விரைவிலே நோயினின்றும் குணமாகி எழுகின்றனர். அத்துடன், எதனையும் சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்கின்றனர். பைத்தியக்கார விடுதியிலே ஆண்களின் தொகை அதிகமாக இருக்கக் காரணம் , அந்த மனவலிமை